- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
என்னை இதுவிளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள்,*
மன்னவன்தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்,*
கன்னிதன்பால் வைக்க மற்றவனோடு எத்தனையோ,*
மன்னிய பேரின்பம் எய்தினாள்,* -மற்றிவைதான்-
காணொளி
பதவுரை
காதலனை - அன்புக்கு உரியவனான (பௌத்திரனான) அநிருத் தாழ்வானை
மாயத்தால் கொண்டுபோய் கன்னிதன்பால் வைக்க - (யோக வித்தைக்கு உரிய மாயத்தினால் எடுத்துக் கொண்டுவந்து தன்னிடத்தில் சேர்க்கப்பெற்று
மற்றவனோடு - அந்த அநிருத்தனோடே
எத்தனை ஓர் மன்னிய பேர் இன்பம் எய்தினாள் - பலவிதமாய் ஒப்பற்ற அமர்ந்த பெரிய ஸுகத்தை அநுபவித்தாள்.
விளக்க உரை
உஷையின் வரலாறு சொல்லப்புகுந்து அவ்வரலாற்றில் அநிருத்தனைப்பற்றி கண்ணபிரானுடைய ப்ரஸ்தாவம் வருதலால் தனது வயிற்றெரிச்சல் தோன்ற விசேஷணமிடுகிறாள் பரகாலநாயகி. அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துக் கொண்டிருந்தும் என்னை அநுபவிக்க வொட்டாமல் இப்படி மடலெடுக்கும்படி பண்ணின மஹாநுபாவன் என்கிறாளாயிற்று. கன்னிதன்பால் – தெய்வப் பெண்ணாகிய தன்னிடத்திலே என்கை. மன்னிய பேரின்ப மெய்தினாள் – உஷை அநுபவித்து சிற்றின்பமேயாயினும் அதனில் மேற்பட்ட ஆநந்தமில்லை யென்று அவள் நினைத்திருந்தது கொண்டு மன்னியபேரின்ப மென்றார்.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்