விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பொன்னகரம் செற்ற புரந்தரனோடு ஏரொக்கும்,*
  மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,*
  தன்னுடைய பாவை உலகத்துத் தன்னொக்கும்,*
  கன்னியரை இல்லாத காட்சியாள்,*  -தன்னுடைய- 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சூழ் கடலுள் - பரந்த கடலினுள்ளே
பொன் நகரம் செற்ற - ஹிரண்யாஸுரனுடைய நகரங்களை அழித்தவனான
புரந்தரனோடு ஏர் ஒக்கும் - தேவேந்திரனோடு ஒத்த செல்வ முடையனான
மன்னவன் - ராஜாதி ராஜனாயும்
அவுணர்க்கு வாள் வேந்தன் - அசுரர்களுக்குள் பிரஸித்தனான தலைவனாயு மிருந்த

விளக்க உரை

பலிச்சக்கரவர்த்தியின் ஸந்தியிற்பிறந்தவனான பாணாஸுரனுடைய பெண்ணாகிய உஷை யென்பவள், ஒருநாள் ஒரு புருஷனோடு தான் கூடியதாக கனாக்கண்டு, அவனிடத்தில் மிக்க ஆசை பற்றியவளாய்த் தன் உயிர்த்தோழியான சித்ரலேகைக்கு அச்செய்தியைத் தெரிவித்து, அவள் மூலமாய் அந்தப் புருஷன் க்ருஷ்ணனுடைய பௌத்திரனும் ப்ரத்யும்நனது புத்திரனுமாகிய அநிருநத்தனென்று அறிந்துகொண்டு ‘அவனைப் பெறுதற்று உபாயஞ் செய்யவேண்டும் என்று அத்தோழியை வேண்ட, அவள் தன் யோகவித்தை மஹிமையினால் த்வாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டுவந்து அந்த புரத்திலேவிட உஷை அவனோடு போகங்களை அநுபவித்து வந்தாள் என்கிற கதை அறியத்தக்கது (இதற்குமேல் நடந்த வரலாறு வாணனை தோள் துணிந்த வரலாற்றில் காணத்தக்கது).

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்