விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முன்னம் புனல்பரக்கும் நன்னாடன் மின்னாடும்*
    கொன்னவிலும் நீள்வேல் குருக்கள் குலமதலை,*
    தன்னிகர் ஒன்றில்லாத வென்றித் தனஞ்சயனை,*
    பன்னாகராயன் மடப்பாவை,*  -பாவைதன்-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பூ கங்கை புனல் முன்னம் பரக்கும் நல் நாடன் - அழகிய கங்காநதியின் தீர்த்தம் முன்னே ப்ரவஹிக்கப்பெற்ற சிறந்த நாட்டுக்குத் தலைவனும்
மின் ஆடும் கொல்நவிலும் நீள்வேல் - ஒளியையுடையதும் கொலைத் தொழிலைக் கற்றதும் நீண்டதுமான வேலாயுத்த்தைக் கையிலே உடையவனும்
குருக்கள் குலம் மிதலை - குருராஜ வம்சத்தில் தோன்றினவனும்

விளக்க உரை

அர்ஜுநன் தீர்த்தயாத்திரையாகச் செல்லுபோது ஸ்நாநஞ் செய்ய கங்கையில் இறங்கி நீராடிக் கரையேறப் புகும்போது உலூபி யென்னும் நாக கன்னிகை இவனைக்கண்டு காம மோஹமடைந்து ரமிக்க விரும்பி இவனைத் தண்ணீரினுள்ளே இழுத்துக்கொண்டு செல்ல இவனும் உள்ளே சென்று நீ யார்? என்னை எதுக்காக இங்கே கொணர்ந்தாய்? என்று கேட்க, அவ்வுலூபி ஐராவத குலத்திற் பிறந்த கௌரவ்யனென்னும் ஸர்ப்பராஜனுடைய பெண் நான், உன்னைக் கண்வாறே மன்மத பாணங்களுக்கு இலக்கானேன், எப்படியாவது நீ என்னை புணர்ந்து மகிழ்விக்கவேணும் என்று வேண்ட அதற்கு அர்ஜுநன் அம்மா நான் இப்போது ஸம்வத்ஸர ப்ரஹ்மாசர்ய வ்ரத்த்தில் நிஷ்டனா யிருக்கின்றேன், ஆகையால் எங்ஙனே புணர்ச்சி செய்வேன்? உனது விருப்பை நிறைவேற்ற வேணுமென்கிற ஆசையும எனக்கு உளது. என்செய்வேன்? என்விரதமும் கெடாமல் உன் விருப்பமும பழுதுபடாமல் காரியமாகும்படியான உபாயத்தை நீயே சொல் என்ன அதற்கு அவ்வுலூபிகை உன் விரத்த்தின் வரலாறு எனக்குத் தெரியும்,

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்