விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கல்நவில்தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும்போய்,*

    பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே?,*  -பூங்கங்கை- 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அழித்து உரப்பி - இழிவான சொற்களைச் சொல்லி அதட்டி
கை பிடித்து - பாணிக்ரஹணம் செய்து கொண்டு
மீண்டும் போய் - அங்கிருந்து ஸ்வஸதாநந்திலே போய்ச் சேர்ந்து
பொன் நவிலும் ஆகம் - (அக்காதலனுடைய) பொன் போன்ற மார்பிலே
புணர்ந்திலளே - அணையப்பெற்றாளில்லையோ?

விளக்க உரை

அழகிற் சிறந்த வேகவதி என்னுமோர் தேவகன்னிகை தனது கணவன் முகத்திலே விழிக்க வொண்ணாதபடி தன்னைத் தனது தமையன் தடைசெய்து இழுத்துக்கொண்டுபோக அவள் அவனை லக்ஷியம் பண்ணாமல் திரஸ்கரித்து உதறித் தள்ளிவிட்டுத் தனது காதலன் ஒரு போர்க்களத்திலே யுத்தம் செய்து கொண்டிருப்பதாகத் தெரிந்து அங்கே போய் இப்படிதானா என்னை நீ கைவிட்டுத் திரிவது என்று தார்க்காணித்து அந்தப் போர்க்களத்திலே பலருமறிய அவன் கையைப் பிடித்திழுத்துத் தன்னூர்க்குக் கொண்டு சென்று இஷ்டமான போகங்களை அநுபவித்து வாழ்ந்தாள் – என்பதாக இவ்விடத்தில் கதை ஏற்படுகிறது. இதன் விரிவை வல்லார் வாய்க்கேட்டுணர்க. முன் தோன்றல் முன்னே பிறந்தவன்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்