விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பின்னும் கருநெடுங்கண் செவ்வாய் பிணைநோக்கின்,*
  மின்னனைய நுண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும்-
  கன்னி,*  தன் இன்னுயிராம் காதலனைக் காணாது,*
  தன்னுடைய முன்தோன்றல் கொண்டேகதாஞ்ன்று,*  ஆங்கு-
  அன்னவனை நோக்காது அழித்துரப்பி,*  -வாளமருள்-

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பின்னும் - அது தவிரவும்
கரு நெடு கண்செம் வாய் பிணை நோக்கின் மின் அனைய நுண் மருங்குல் - கறுத்து நீண்ட கண்களையும் சிவந்த வாயையும் மான் போன்ற நோக்கையும் மின்போல் ஸூக்ஷம்மான இடையையும் உடையவளாய்
வேகவதி என்று உரைக்கும் கன்னி - வேகவதியென்று சொல்லப்படுபவளான ஒரு பெண்பிள்ளை
தன் இன் உயிர் ஆம் காதலனை காணாது - தனது இனிய உயிர்போன்ற கணவனைத்தான் காண வொட்டாமல்

விளக்க உரை

வேகவதி என்பாளொரு தெய்வமாதின் சரிதையை எடுத்துக்கொட்டுகிறார். இதில சிறிய திருடலிற் சொல்லப்பட்ட வாஸவதத்தையின் சரித்திரத்துக்கு மூலமாகிய புராணம் இன்னதென்றுதெரியாதுபோலவே இவ்வேகதியின் சரிதைக்கு மூலமான புராணமும் இன்னதென்று தெரியவில்லை. தமிழ்நாடுகளில் ப்ரஸித்தமான பெருங்கதை என்ற தொகுதியில் உதயணன் சரித்திரப் பகுதியில் இத்தெய்வமாதுகளின் வரலாறு ஒருவிதமாக எழுதப்பட்டுள்ளது. வடமொழியிலும் கதாஸரித்ஸாகரம் என்ற கதைப்புத்தகத்தில் இவர்களின் சரித்திரம் சொல்லப்பட்டுள்ளது.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்