- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே?,*
காணொளி
பதவுரை
விளக்க உரை
தாத என்ற வடசொல் தாதையெனத் திரிந்தது. வலங்கொண்டு – (பலம்) என்ற வடசொல் வலமெனத்திரிந்தது. மனவலிவைச் சொல்லுகிறது. கொண்ட காரியத்தைக் குறையறத் தலைக்கட்டியே விடும்படியான அத்யவஸாயம். மன்னும் வளகாடு –மன்னும் –குலக்ரம்மாகத் தனக்கு ப்ராப்தமான என்றுமாம். மாதிரங்கள் –மாதிரம் என்று ஆகாயத்துக்கும் திசைக்கும் பூமிக்கும் மற்றும் பலவற்றுக்கும் வாசகம் “விண்டேர் திரிந்து“ என்று பாடம் வழங்கிவந்தாலும் வெண்டேர் என்றே உள்ளது பிரயோகங்களும் அப்படியே. வடமொழியில் ம்ருகத்ருஷ்ணா என்று சொல்லப்படுகிற கானல் தமிழில் வெண்டேர் என்றும் பேய்த்தேர் என்றும் சொல்லப்படும். வெளிப்பட்டு –செடி மரம் முதலியவை இருந்தால் வெய்யிலுக்கு அவற்றின் நிழலில் ஒதுங்கலாமே, அப்படி ஒன்றுமில்லாமல் பார்த்த பார்த்த விடமெல்லாம் வெளி நிலமாயிருக்கை. கல்நிறைந்து – வழிமுழுவதும் க்றகள் நிரம்பியிருக்கும். தீய்ந்து எனினும் தீந்து எனினும் ஒக்கும். மருகாந்தாரங்களிற் கண்ட விடமெங்கும் தீப்பற்றி எரிந்துகிடக்குமாய்த்து. கழை –மூங்கில். வெய்யிலின் மிகுதியினால் மூங்கில்கள் வெடித்துக்கிடக்கும் கால்சுழன்று எங்கும் சூறாவளியாய்க்கிடக்கும். சூறாவளி – சுழல் காற்று, மனிதரைத்தூக்கி யெறியுங்காற்று.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்