விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  துன்னு நறுமலரால் தோள்கொட்டி,*  கற்பகத்தின்-
  மன்னு மலர்வாய் மணிவண்டு பின்தொடர*
  இன்னிளம் பூந்தென்றல் புகுந்து, ஈங்கிளமுலைமேல்*
  நன்னறுஞ் சந்தனச் சேறு அலர்த்த,*  -தாங்கருஞ்சீர்- 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மன்னும் பவளக்கால் - சிறந்த பவழ ஸ்தம்பங்களை யுடையதும்
செம்பொன் செய் - செம்பொன்னால் செய்யப்பட்டதுமான
அன்னம் நடைய அரம்பையர் தம் கை வளர்த்த - அன்ன நடையுடைய அப்ஸரஸ்ஸுக்களின் கை வழியாக வுண்டான
இன் இசை யாழ் பாடல் - இனிய இசையை யுடையவீணையின் பாட்டை

விளக்க உரை

ஆதலால் காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றும் நாம்) நான்கு புருஷார்த்தங்களில் மோக்ஷமென்பது முதலிலேயே தள்ளுண்டது, தருமமும் அர்த்தமும் காமஸித்தியையே பயனாகக் கொண்டன, ஆகவே, காமபுருஷார்த்த மொன்றே முக்கியம், மற்ற அறம் பொருள்கள் இதற்குச் சேஷபூதம் – என்று இதுவரையில் நிரூபிக்கப்பட்டதாதலால் நாம் காமபுருஷார்த்தத்தையே கைக்கொள்வோமானோம், அது தன்னிலும் ஹேயமான விஷயாந்தர காமமன்றிக்கே வேதாந்த விஹிதமாய் உத்தேச்யமாய் சாச்வதபலமான பகவத்விஷய காமத்தைக் கைக்கொண்டோம் என்று ஆழ்வார் தமது உறுதியைக் கூறித்தலைக்கட்டினாராயிற்று.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்