விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்,*
  துன்னிய சாலேகம் சூழ்கதவம் தாள்திறப்ப,*
  அன்னம் உழக்க நெரிந்துக்க வாள்நீலச்,*
  சின்ன நறுந்தாது சூடி,*  -ஓர் மந்தாரம்-  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வேண்டிடத்து விளையாடி - யதேஷ்டமான இடங்களில் ரமித்து
மன்னும் மணி தலத்து - சிறந்த ரத்னங்களழுத்தின ஸ்தலங்களிலே (கட்டப்பட்டு)
மாணிக்கம்மஞ்சரியின் - மாணிக்க மயமான பூங்கொத்துக்களை யுடையதும்
மின்னின் ஒளி சேர்பளிங்கு விளிம்பு அடுத்த - மின்னல்போலே பளபள வென்று விளங்குகின்ற ஸ்படிகக் கற்களாலே குறடு (கொடுங்கை) கட்டப்பெற்றதும்

விளக்க உரை

அப்படிப்பட்ட தென்றவானது முன் சொன்ன கதவு திறந்த சன்னல் வழியே உள்ளே புகுந்து மாதர்களின் முலைமேற் பூசியுள்ள சந்தனச்சேற்றை யுலர்த்துகின்றதாம். அத்தகைய தென்றற்காற்று இனிதாக் வீசப்படுக்கையிற் படுகிறப்படி சொல்லிற்றாகிறது. இது உடலுக்கு நேரும் ஸுகம். இனி, செவிப்புலனுக்கு சேரும் ஸுகஞ் சொல்லுகிறது –சில தேவமாதர் உல்லாஸமாக இடுப்பின்மீது கையை வைத்துக்கொண்டு முன்னே வந்து நிற்க அவர்களது முலைகளின்மேல் அணியப்பட்டிருக்கின்ற காசுமாலை முதலிய ஆபரணங்கள் ஒன்றோடொன்று உறைந்து கலகலவென்று சப்திக்க, அந்த சப்தத்தாலே செவிக்கு ஆநந்தம் பெறுகிறபடி. உண்ணுஞ்சோறும் பருகும் நீரும் அவர்கட்கு வேறில்லை, அத்தேவமாதர்களின் கடாக்ஷ வீக்ஷணத்தை ஓவாத ஊணாக உண்பர். அவர்களது புன்முறுவலோடு கூடின அதராம்ருதத்தைப் பானம் பண்ணுவர். ஆக இவ்வளவுஞ் சொல்லப்பட்ட இன்ப நுகர்ச்சியே தரும புருஷார்த்தத்திற்குப் பயனாகப் பெறுவதாம். இரண்டாவதான அர்த்தம் (பொருள்) என்னும் புருஷார்த்தத்தின் பயனும் இதுவே யொழிய வேறில்லை, பொருள் படைத்தவர்கள் தருமம் செய்வர்கள் ஆதலால் அறத்தின் பயனே பொருட்கும் பயனாக முடியக்கடவதாம்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்