விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மின்னிடையாரோடும் விளையாடி வேண்டிடத்து,*
  மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின்,*
  மின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த,*
  மன்னும் பவளக்கால் செம்பொன்செய் மண்டபத்துள்,*
  அன்ன நடைய அரம்பயர்த்தம் கைவளர்த்த*
  இன்னிசையாழ் பாடல் கேட்டு இன்புற்று,*  -இருவிசும்பில்-

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அணி மலர சேர் - அழகிய பூக்கள் நிறைந்துள்ள
பொன் இயல் கற்பகத் தின் காடு உடுத்தமாடு எல்லாம் - பொன்மயமான கற்பகக்காடுகள் நிறைந்த ப்ரதேசங்க ளெல்லாவற்றிலும்
மன்னிய மந்தாரம் பூத்த மது திவலை - நிலைபெற்றிருக்கிற பாரிஜாத வ்ருக்ஷங்களின் பூக்களிலுள்ள மகரந்த பிந்துக்களில்
இன் இசை வண்டு அமரும் சோலை வாய்  - இனிய இசைகளைப்பாடுகின்ற வண்டுகள் பொருந்தி யிருக்கப்பெற்ற பூஞ்சோலைகளிலே,

 

விளக்க உரை

இரு விசும்பில் மன்னு மழை தவழும் என்று தொடங்கி அணிமுறுவ லின்னமுதம் மாந்திருயிருப்பர் என்னுமளவும் ஒரு வாக்கியார்த்தமாகக் கொள்க) வீணாகானங் கேட்டுக் களைதீர்ந்து களித்த பின்பு அத்தேவ மாதர் விரித்த படுக்கைகளிலே கிடந்து போகங்களின் எல்லையான பரம போகங்களை அநுபவித்துத் தீருகிறபடி சொல்லுகிறது. ஸ்வர்க்கலோகத்து அநுபவங்களின் சரமாவதியைச் சொல்லு கிறதாகையாலே இந்த வாக்கியத்தைச் சிறிது விரிவாகச் சொல்லி முடிக்கிறார். இத தார்மிகர்கட்காகப் படுக்கை விரிக்கும் மாளிகை மேக மண்டலங்கள் வந்து படியப்பெற்றிருத்தலால் இருட்சியும் குளிர்ச்சியும் பொருந்தியும், சந்திரன் வந்து உறைந்தருப்பதனால் ப்ரகாசம் பொருந்தியுமிருக்கும். ஸம்போக ருசியுடையார்க்கு இருளும் வெளிச்சமும் இரண்டும் வேண்டியிருக்குமே. அப்படிக்குப் பாங்கான மாளிகையின் மேல் ரத்தன தீபங்களைத் தொங்கவிட்டு அப்ஸரஸ்ஸுக்கள் ஆச்சரியமான படுக்கையை விரிப்பார்கள். உலகில் இப்படியும் ஒரு படுக்கையுண்டோ? என்று கொண்டாடிக் கொண்டாடி நாத்தழும் பேறும்படி யிருக்குமாம் அப்படுக்கை. அதன்மேல் சயனிக்கும்போது சன்னல்கள் கதவு திறந்துகொள்ள அவ்வழியாலே இனிய தென்றற்காற்று வந்து உள்ளே வீசும்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்