விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தன்னுடைய அங்கைகளால் தான்தடவ தான்கிடந்து,*  ஓர்-
  உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட-
  பின்னை,*  தன் நாபி வலயத்துப் பேரொளிசேர்,*
  மன்னிய தாமரை மாமலர்பூத்து,*  அம்மலர்மேல்-
  முன்னம் திசைமுகனைத் தான்படைக்க,*  மற்றவனும்-
  முன்னம் படைத்தனன் நான்மறைகள்,*  -அம்மறைதான்-   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அணங்குதான் - தெய்வப்பெண்ணாகிய பூமிப்பிராட்டி
தன்னுடைய அம்கைகளால் அடி இணையை தடவ - தனது அழகிய கைகளாலே திருவடிகளைப் பிடிக்கப்பெற்றும், (ஆகிய இத்தனை விபவங்களுடனே)
ஓர் மா மலை போல் கிடந்து - விலக்ஷணமான வொருகருமலை சாய்ந்தாற் போலே பள்ளிக்கொண்டு

விளக்க உரை

சென்னி – தலை, படமென்க, “சென்னி மணிக்குடுமித் தெய்வக் சுடர்நடுவுள்“ என்கிற விதனையே ஆளவந்தார்“ ஸ்தோத்ர ரத்நத்தில் மொழி பெயர்த்தா ரென்னலாம். “மன்னிய நாகத்து“ என்றவிடத்து, மன்னி என்று வினையெச்சமாகப் பிரித்து, அந்நாகத்து என்பது அநாகத்து எனத் தொக்கியிருப்பதாகக் கொண்டு உரைக்கப்பட்டது. இதுவே நன்கு பொருந்தும். மன்னிய என்றே பிரித்துப் பெயரெச்சமாகக் கொண்டு நாகத்தணைக்கு விசேஷணமாக்கி உரைத்தலுமான், மன்னிய –படுக்கும்போது விரித்து மற்றபோது சுருட்டிவைக்க வேண்டாதே எப்போதும் படுக்கையாகவே பொருந்தியிருக்கிற நாகமென்கை. இவ்வகைப் பொருளில், அசுரச் சுட்டு வருவித்துக்கொள்ள வேண்டியது அவசியமாம்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்