விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தன்னை முன நாள் அளவிட்ட தாமரைபோல்,*
  மன்னிய சேவடியை வான்இயங்கு தாரகைமீன்,*

  என்னும் மலர்ப்பிணையல் ஏய்ந்த,*   -மழைக்கூந்தல்- 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மறி கடலும் முனம் நாள் நிலம் மங்கை தன்னை அளவிட்ட தாமரைப்போல் மன்னிய சே அடியை பன்னு திரை கவிர வீச - அலையெறிகிற ஸமுத்ர ராஜன், முன்னொருகால் பூமிப்பிராட்டியை அளந்த திருவடித் தாமரையை நோக்கி பரம்பின அலைகளாகிற சாமரங்களை வீசப்பெற்றும்,
1. வான் இயங்கு தாரகை மீன் என்னும் மலர் பிணையல் எய்ந்த - ஆகாசத்திலே யுள்ள நக்ஷத்ரங்களாகிற புஷ்ப புஞ்சங்களை அணிந்துள்ளவளாய்,
2. மழை கூந்தல் -  மேகங்களாகிற கூந்தலை யுடையளாய்

விளக்க உரை

(பல்பொறிசேர் இத்யாதி) திருமேனி நிறையப் புள்ளிகளை யுடையவனும் ஆயிரம் பைந்தலைகளை யுடையனும் மஹாதேஜஸ்வியுமான திருவனந்தாழ்வானுடைய படங்களிலேயுள்ள மாணிக்கமணிகளின் சிகைகளிலிருந்து கிளம்பி எங்கும் பரவியிராநின்ற ஆச்சரியமான தேஜோராசிகளால் முட்டாக்கிடப்பெற்ற அந்த சேஷசயனத்திலே, திருமகரக்குழைகள் பளபளவென்று ஜவலிக்க, கரிய மால்வரை போலே துயில்கின்றதாம் நாராயண பரஞ்ஜோதி. முத்துக்க ளென்னத்தக்க நக்ஷத்ரங்கள் நிறைந்த ஆகாசமண்டலம் மேற்கட்டியாக அமைந்தது, நிகரின்றி ஜ்வலிக்கின்ற திருவாழி திருச்சங்குகள் திருவிளக்குகளாயின அன்றிவ்வுலகமளந்த திருவடியின் விடாய் தீரப் பாற்கடல் தனது அலைகளையே சாமரமாக வீசிற்று, பூமிப்பிராட்டி, திருவடி வருடாநின்றான்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்