விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறுஆக*
  ஈரா அதனை இடர்கடிந்தான் எம்பெருமான்*
  பேர்ஆயிரம்உடையான் பேய்ப்பெண்டீர் நும்மகளைத்*
  தீரா நோய் செய்தான் எனஉரைத்தாள்*--சிக்கெனமற்று

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வெகுண்டு - (கஜேந்திர விரோதியின் மேல்) கோபித்து
தீராத சீற்றத்தால் சென்று - அடங்காத அக்கோபத்தாடே (பொய்கைக்கரைக்கு) எழுந்தருளி
இரண்டு கூறு ஆக ஈரா - (முதலயை) இருதுண்டமாகப் பிளந்து
அதனை இடர் கடிந்தான் எம்பெருமான் - அந்தக் கஜேந்திரனுடைய துன்பத்தைப் போக்கடித்த எம்பெருமான்
பேர் ஆயிரம் உடையான் - (இப்படிப்பட்ட அளவற்ற காரியங்களுக்கு வாசகமான) ஸஹஸ்ர நாமங்களை யுடையவன், (அவ்வெம்பெருமான் தான்)

விளக்க உரை

ஆரிடரை நீக்காய் –முதலைவாயிலகப்பட்டுப் படுகிற துக்கத்தை நீக்க வேண்டுகின்றானல்லன் கஜேந்திராழ்வான். கையில் பறித்து வைத்துக்கொண்டிருக்கிற செந்தாமரைப்பூ செவ்வியழிவதற்கு முன்னே எம்பெருமானது திருவடிகளில் சாத்தப் பெறவேணுமென்பதே அவனது அபிநிவேசமாதலால் அவ்வபிநிவேசம் நிறைவேறப்பெறாமையால் வந்த துக்கத்தை நீக்கச் சொல்லுகிறவித்தனை. இந்தவுடம்பைக் காப்பாற்றிக்கொள்ள நான் கரையவில்லை, கையிலுள்ள தாமரைப்பூவைத் திருவடிகளில் ஸமர்ப்பிக்க வேணுமே என்றே கரைகின்றே னென்றவாறு. ஈரா –இறந்தகால வினையெச்சம், ஈர்ந்து என்றபடி. அதனை இடர் கடித்தான் – அந்த ஸ்ரீகஜேந்திராழ்வான் கையிலிருந்த தாமரைப்பூக்களைத் திருவடிகளில் ஸமர்ப்பிக்கப் பெற்றுக்கொண்டா னென்றபடி. இப்படி சில திவ்ய சேஷ்டிதங்களைச் சொல்லி, இப்படிப்பட்ட பல்லாயிரம் திவ்ய சேஷ்டிதங்களுக்கு வாசகமான ஆயிரம் திருநாமங்களையுடைய பெருமான் உங்கள் மகளை நோவுபடுத்தினவன் காண்மின் என்று கட்டுவிச்சி கூறித் தலைக்கட்டினாளாயிற்று. இந்நோய் தீருவதற்கு உபாயமென்னவென்று விசாரிக்கிறவர்களே. நோக்கித் “தீரா நோய் செய்தான்“ என்று சொல்லுகிறபடி பாருங்கள். வேறுவிதமான நோயாகிலன்றோ அது தீரவேணுமென்று அவர்கள் சிந்திப்பர்கள், ஸர்வேச்வரனடியான நோயென்று தெரிந்தவாறே அவர்கள் இந்நோய் தீராமல் நித்யமாய்ச் செல்லவேணும்‘ என்று மநோரதிப்பர்களாதலால் அவர்களது கருத்துக்கு இணங்கத் தீரா நோய் என்றாளென்க. தீராத நோயாவது பக்தி. இது ஆத்மாவுள்ளவரையில் தொடர்ந்து செல்லக்கடவது, ப்ராப்தி தசையிலும் அநுவர்த்திக்குமிறே (கட்டுவிச்சியின் பேச்சு முற்றிற்று, இனி பரகாலநாயகியின் நிர்வேதம்)

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்