- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“உமக்கறியக் கூறுகேனோ“ என்ற கட்டுவிச்சி அங்ஙனமே விரிவாகக் கூறுகின்றாள், “ஆராலிவ்வை மடியளப்புண்டதுதான்“ என்று தொடங்கி “பேராயிர முடையான் பேய்ப்பெண்டீர் நும்மகளைத் தீராநோய் செய்தான்” என்னுமளவும் கட்டுவிச்சியன் வார்த்தை. இதில், எம்பெருமான் உலகமளந்தது இலங்கையைப் பாழ்படுத்தியது, கோவர்த்தன்மலையை யெடுத்துக் கல்மர்காத்தது, கடல் கடைந்தது, பசு மேய்த்தது, உலகமெல்லாம் உண்டுமிழ்ந்தது, வெண்ணெய் களவுசெய்து தாம்பினால் கட்டுண்டது, காளியநாகத்தைக் கொழுப்படக்கியது, சூர்ப்பணகையின் அங்கபங்கம் செய்த்து, கரனைக் கொன்றது, இராவணனைக் கொன்றது. இரணியனை முடித்தது, கஜேந்திராழ்வனைக் காத்தருளியது – ஆகிய சரித்திரங்கள் கூறப்பட்டுள்ளன. இவ்வரிய பெரிய காரியங்களைச் செய்தருளின பரம புருஷன்தான் உங்கள் மகளைத் தீராநோய்க்கு ஆளாக்கினான் என்று சொல்லி முடித்தாளென்க. மாவலியைப் பாதாளத்தில் சிறை வைத்தும், குளவிக்கூடு போலே அசுர ராக்ஷஸர்கள் மிடைந்து கிடந்த இலங்கையை நீறாக்கியும், கடல் கடைந்து அமுதமளித்தும், குன்றெடுத்துக் கோநிரைகாத்தும், பிரபஞ்சங்களை ப்ரளயங் கொள்ளாதபடி நோக்கியும் இவ்வகையாலே அடியார்களுக்குப் பலவிதங்களான நன்மைகளை புரிந்து தனது திருக்கல்யாண குணங்களை நன்கு விளங்கச் செய்துங்கூட த்ருப்தி பெறாத எம்பெருமான் தனது ஸௌலப்யமாகிற வொரு குணத்தை வெட்ட வெளிச்சமாக்குவதற்காகவே வெண்ணெய் களவு செய்த வியாஜத்தாலே உரலோடு கட்டுண்டதாகச் சொல்லுகிற அழகைப் பாருங்கள்.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்