- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
இனி நான்காவதாக மோக்ஷபுருஷார்த்தமென்று ஒன்று உண்டென்பாருடைய ஸித்தாந்தத்தை தூஷிக்கிறார். இதுவென்? ஆழ்வார் நாஸ்திகரன்றே, ஆஸ்திகராயிருந்துவைத்து மோக்ஷத்தை இல்லைசெய்யலாமோ எனின், உட்கருத்து அறிகின்றிலீரகள். “நீள்விசும்பருளும்“ என்றும் “இறந்தால் தங்குமுர் அண்டமே கண்டுகொண்மின்“ என்றும் தமது பலபல திவ்ய ஸூக்திகளாலே பலச்ருதிகளிலே மோக்ஷத்தை அருளிச்செய்கிற இவ்வாழ்வார் மோக்ஷதூஷகராக எங்ஙனேயாவர்? பின்னே இதுதன்னில் மோக்ஷத்தை இல்லைசெய்வானேன்? என்னில், இங்கு நஹிநிந்தா நியாயம் அநுஸந்திக்கத்தக்கது, மோக்ஷதூஷணம் இங்கு விளங்க நின்றாலும் அர்ச்சாவதார ப்ராவண்யத்தைச் சிறப்பித்துச் சொல்லுவதில் ஆழ்வார்க்கு முக்கிய நோக்கமென்று கொள்ள வேணுமேயல்லது மோக்ஷதூஷணத்தில் நோக்காகக் கொள்ளக்கூடாது. நஹிநிந்தா நியாயத்தின் கருத்து இதுவேயாம். மோக்ஷமுண்டென்பது அவிவேகிகள் சொல்லும்சொல் என்றதை நிரூபிக்கிறார் காரார் புரவியேழ் என்று தொடங்கி. மேகமண்டலத்திலே சஞ்சரிக்கின்ற ஏழுகுதிரைகள் பூட்டின ஒற்றைச்சக்கரமுடைய தேரிலே கதிராயிரமுடையனாய் விளங்குகின்ற ஸூர்யனுடைய மண்டலத்தைப் பிளந்துகொண்டு அவ்வழியே போய் ஒரு பரமபதமென்னும் தேசத்தை அடைவதாகவும் அங்கே ஆராவமுதத்தை அநுபவிப்பதாகவும் அவ்விடத்தை விட்டு ஒருநாளும் திரும்பி வருவதில்லையாகவும் இப்படிப்பட்ட கட்டுக்கதைகளைக் கூறுகின்றார்களே விவேகிகள் இப்படி அஸம்பத்தப்ரலாபம் பண்ணுவர்களா வென்று நீங்கள் ஆராயமாட்டீர்களோ வென்கிறார், மேகமண்டலத்தில் அஸம்பாவிதம், அந்தத் தேரை ஏழுகுதிரைகள் இழுக்கவேண்டியதும் அப்ரஸக்தம், நெடுந்தூரத்தினின்றும் கண்ணைச் செம்பளித்துப் பார்க்கவும் முடியாத ஸூர்யணைப் பிளந்துகொண்டு போவதென்பது ஸர்வாத்மநா அஸம்பாவிதம் இந்நிலத்திலே ஆராவமுதமிருப்பதாகச் சொல்லுவதும், அதனை யனுபவிப்பவர் எஞ்ஞான்றும் அந்வாருஹ்யவாதம் பண்ணினாராயிற்று. (அந்வாருஹ்யவாதமாவது – உண்மையில் தமக்கு அபிமதமல்லாத பொருளை ஒரு கார்யார்த்தமாக ஏற்றுக்கொண்டு சொல்லுகை, ஜைமிநிமஹர்ஷி பூர்வமீமாம்ஸையில் நிரீச்வரவாதம் பண்ணிருப்பதை இதற்கு த்ருஷ்டாந்தமாகக் கூறலாம்).
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்