விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை*  வாய்வைத்த போரேறே!*  என்
  சிற்றாயர் சிங்கமே! சீதை மணாளா!*  சிறுக்குட்டச் செங்கண் மாலே!*
  சிற்றாடையும் சிறுப்பத்திரமும்*  இவை கட்டிலின் மேல் வைத்துப் போய்* 
  கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக்*  கலந்து உடன் வந்தாய் போலும்*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முன் - (பாரதப் போர் செய்த) முற்காலத்தில்;
பற்றார் - (உனது உயிர்போன்ற பாண்டவர்களுக்குப்) பகைவரான துரியோதனாதியர்;
நடுங்கும் - நடுங்கும்படி;
பாஞ்ச சன்னியத்தை - சங்கத்தை;
போர் ஏறே - போர்செய்யலுற்ற காளை போன்ற கண்ணபிரானே;
எனக்கு விதேயனாய்
சிறு ஆயர் சிங்கமே - சிறிய இடைப்பிள்ளைகளுள் சிங்கக்குட்டி போன்றுள்ளவனே;
 
 

விளக்க உரை

(“த்விஷதந்நம் ந போக்தவ்யம் – பாண்டவாந் த்விஷஸே ராஜந்“) என்று கண்ணபிரான்தானே அரளிச்செய்தமையால், துர்யோதநாதிகள் பாண்டவர்களுக்குப் பகைவராயினும் இவன்றனக்கே பகைவராகச் சொல்லப்பட்டனர், உயிர்வேறல்லாமையாலே நடுங்க “*** “ என்ற கீதையை நினைக்க. சிறுக்குட்டன்+செங்கண்மால்=சிருகுட்டச் செங்கண்மால்; “சிலவிகாரமாமுயர்திணை”” என்பது நன்னூல். சிறுகுட்டன் -சிறுகுட்டனே! என விளித்தவாறு; “இம்முப் பெயர்க்கண் இயல்பும் ஏயும், இகரநீட்சியு முருபாம் மன்னே” என்பதும் நன்னூல். சிறுப் பத்திரம்-சிறிய கத்தி; “பத்திரமிலை வனப்புப் படை நன்மை சிறகே பாணம்”” என்பது நிகண்டு. பின்னிரண்டடிகளின் கருத்து:-நீ கன்றுமேய்க்க காடு செல்ல நினைத்தபோது நான் உனது உத்தரீயத்தையும் விளையாட்டுக்கு உபகரணமான சொட்டைக் கத்தியையும் தரச் செய்தேயும் நீபோகையிலுள்ள விரைவாகே அவற்றைக் கட்டிலிலேயே வைத்து மறந்து விட்டுக் காட்டுக்குப் போய் இடைப் பிள்ளைகளோடொக்கக் கன்றுகளை மேய்த்துவிட்டு மாலைப்பொழுதானவாறே அப்பிள்ளைகளோடு கூடவே ‘இவன் இவர்களிலே ஒருவன்’ என்றே நினைக்கும்படி வந்துசேர்ந்தாயன்றோ என்று உகக்கிறாள்; மேல் பீதாம்பரமும் உடைவாளும் கையிலிருந்தால் வைலக்ஷண்யந் தோற்றும் என்பது உட்கருத்து.

English Translation

O Lord who blew the conch Panchajanya that sent shivers in the enemy camp, my little cowherd lion-cub, Sita’s bride-groom, my little child of lotus-like eyes! You left behind your little cape and sword on the cot and went with the older boys grazing your calves with their coes, and came back with them!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்