விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வகையால் மதியாது*  மண்கொண்டாய்*  மற்றும் 
  வகையால்*  வருவதுஒன்றுஉண்டே*  வகையால்
  வயிரம் குழைத்துஉண்ணும்*  மாவலிதான் என்னும்* 
  வயிர வழக்குஒழித்தாய் மற்று.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாவலி - மஹாபலியினுடைய
வயிரம் வழக்கு - சத்ருத்வமுறையை
ஒழித்தாய் - போக்கினாய்
வகையால் - இப்படிப்பட்ட உனது காரியங்களினால்
வருவது ஒன்று உண்டே - உனக்கு ஸித்திப்பதொருபலன் உண்டோ? (எல்லாம் ஆச்ரிதர்க்காகச் செய்கிறாயித்தனை.

விளக்க உரை

எம்பெருமான் செய்தருளுங் காரியங்களெல்லாம் அடியார்களுடைய பிரயோஜனத்திற்காகவேயன்றி ஸ்வப்ரயோஜநத்திற்காக ஒரு காரியமும் செய்வதில்லை யென்பதை வெளியிடும் பாசுரம். மதியாது வகையால் மண்கொண்டாய் – “உபய விபூதிநாதனாயிருக்கிற நாம் யாசகனாகப் போகலாமோ“ என்று தன் மேன்மையைச் சிறிதும் பாராமல் “ஆச்ரிதனான இந்திரனுக்குக் காரியம் தலைக்கட்டுமளவே வேண்டியது“ என்று அதனையே பார்த்து யாசகனாயச் செல்லுகையாகிற உபாயத்தினால் பூமியையெல்லாம் ஸ்வாதீநப்படுத்திக் கொண்டாய். இரண்டாமடியை முடிவில் அந்வயித்துக் கொள்க. (வகையால் வயிரங்குழைத்துண்ணும் இத்யாதி) நவரத்னங்களுள் ஒன்றான வஜ்ர்தை இளகுவித்து உண்பர்களாம் உடல் புஷ்டியடைவதற்காக, மாவலியும் அப்படியே உண்ட ஊன்மல்கிமோடு பருத்திருந்தானும், அப்படிப்பட்ட அவனுடைய அஹங்கார ப்ரயுக்தமான வயிரவழக்கைப் போக்கினாய். ஈற்றடியிலுள்ள “வயிரம்“ என்ற சொல் “***“ என்ற வடசொல் விகாரம். மற்றும் வகையால் வருவதோன்றுண்டே? இவற்றால் உனக்கு வரும் ப்ரயோஜனம் ஏதேனுமுண்டோ? ஒன்றுமில்லை, பரார்த்தமாகச் செய்தாயித்தனை.

English Translation

Heedlessly you took the Earth by begging, can thee be anything more despicable? And yet you dissolved the strong ego of Mabali who lived by drinking strong substances, What a wonder!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்