விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நாராயணன்*  என்னைஆளி*  நரகத்துச் 
  சேராமல்*  காக்கும் திருமால்*  தன்பேரான
  பேசப்பெறாத*  பிணச்சமயர் பேசக்கேட்டு* 
  ஆசைப்பட்டு ஆழ்வார் பலர.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

திருமால் தன் - திருமாலினது
பேர் ஆன - திருநாமங்களாயுள்ளவற்றை
பேச பெறாத - ஸங்கீர்த்தநம் பண்ணும் பாக்கியமற்றவர்களான
பிணம் - ஜீவச்சவ மென்னலாம்படியுள்ள பாஹ்யகுத்தருஷ்டி மதஸ்தர்கள்
பேச - (அபார்த்தங்களைப்) பிதற்ற

விளக்க உரை

இவ்வுலகில் தேவதாந்தா பக்தர்களும் உபாயாந்தர நிஷ்டர்களுமே மலிந்து கிடக்கிறார்களே! என்று வயிறெரிந்து பேசுகிறார். கைல லோகஸம்ரக்ஷகனாய் நரகநாசனான ஸ்ரீமந்நாராயணனுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தநம்பண்ணி வாழலாமாயிருக்க, அப்படி வாழ்வதற்குப் பாக்கியமற்றவர்களாய் “ஜீவச்சவங்கள்“ என்று இகழ்வதற்குத் தகுந்தவர்களாயுள்ள மதாந்தரஸ்தர்கள் தேவதாந்தரங்களுக்குச் சிறப்பாகவும் உபாயாந்தரங்களுக்கு புகழ்ச்சியாகவும் எதையாவது வாய்வந்தபடி பிதற்றிக்கொண்டிருக்கின்றனர், பல பாவிகள் அப்பிதற்றல்களைக் கேட்டு “நாமும் இவர்களைப்போலவே தேவதாந்தர பக்தர்களாயும் உபாயாந்தர நிஷ்டர்களாயும் இருக்கலாமே“ என்று அவர்களுடைய நிலைமையிலே ஆசைகொண்டு இவ்வழியாலே அதோகதியை அடைந்தொழிகின்றதே இவ்வுலகம்!, நல்ல பேச்சுப் பேசினால் செவிமடுத்துக் கேட்டுகப்பார் ஆரூமில்லையே, ஆத்மநாசத்தை விளைக்கவல்லை பேச்சுக்களே பொலிவுபெறுகின்றனவே! என்று பரிதபித்துப் பேசினாராயிற்று.

English Translation

Our Lord and protector is Tirumal. Misguided by those wretches who do not take the name of Narayana there are many who fall into illusion and suffer.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்