விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மதித்தாய்போய் நான்கில்*  மதியார்போய் வீழ* 
  மதித்தாய் மதிகோள் விடுத்தாய்*  மதித்தாய்
  மடுக்கிடந்த*  மாமுதலை கோள்விடுப்பான்*  ஆழி 
  விடற்குஇரண்டும் போய் இரண்டின் வீடு.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மதியார் - உன்னைச் சிந்தியாதவர்கள்
நான்கில் - நால்வகைப்பட்ட யோனிகளில்
போய் போய் வீழ - சென்று சென்று பலகாலும் விழும்படியாக
மதித்தாய் - ஸங்கல்பித்தாய்,
மதி - சந்திரனுடைய

விளக்க உரை

ஆழ்வார்களுடைய போதுபோக்குப் பலவகைப்பட்டிருக்குமே, ஸம்ஸாரிகளை நோக்கிச் சில பாசுரங்கள் கூறுவர், தம் திருவுள்ளத்தையே நோக்கிச் சில பாசுரங்கள் கூறுவர், எம்பெருமான்றன்னை நோக்கிக் கூறும்பாசுரம் இது. மதித்தாய்போய் நான்கின் மதியார் போய் வீழ – இதற்கு இரண்டு வகையான யோஜநைகள் உண்டு, மதியார் – உன்னைச் சிந்தித்து அடிபணியாதவர்கள், நான்கில் போய்வீழ – (வீடு பெறாமல்) சதுர்வித யோநிகளிலும் மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து நசிக்கும்படியாக, மதித்தாய் – என்பது ஒரு யோஜனை. அன்றியே, நான்கின் – நான்கு வேதங்களைக் கொண்டு, மதியார் – உன்னைச் சிந்திக்க மாட்டாதவர்கள், போய்வீழ – (ஆஸுர யோநிகளில்) விழுந்து ஒழியும்படியாக, மதித்தாய் – என்பது மற்றொரு யோஜநை. மதிகோள் விடுத்தாய் – சந்திரனுக்கு நேர்ந்திருந்த க்ஷரோகத்தைப் போக்கினாய். இரண்டும்போய் இரண்டின் வீடு மதித்தாய் – முதலையும் சாபங்கொண்டிருந்தது, கஜேந்திரனும் சாபங்கொண்டிருந்தான், எங்ஙனேயென்னில், மஹாவிஷ்ணுபக்தனான இந்த்ரத்யும்நனென்னும் அரசன் வழக்கப்படி ஒருநாள் ஏகாக்ரசித்தனாய் விஷ்ணு பூஜை செய்துகொண்டிருந்தபோது அகஸ்த்ய மஹாமுனிவன் அவனிடம் எழுந்தருள, அப்பொழுது அவ்வரசன் தன் கருத்து முழுவதையும் திருமாலைப் பூஜிப்பதில் செலுத்தி யிருந்த்தனால் அம்முனிவனது வருகையை அறியாதவனாய் அவனுக்கு உபசாரமொன்றும் செய்யாதிருக்க, அம்முனிவன் இப்பழ நம்மை அரசன் அலகஷியஞ் செய்தானென்று மாறாகக் கருதிக் கோபித்து “நீயானை போலச் செருக்குற்றிருந்ததனால் யானையாகக் கடவை“ என்ற சபித்தான். (அங்ஙனமே அவன் ஒரு காட்டில் யானையாகத் தோன்றின்னாயினும் முன்செய்த விஷ்ணுபக்தியின் மஹிமையினால் அப்பொழுதும் விடாமல் நாடோறும் ஆயிரந்தாமலை மலர்களைக் கொண்டு திருமாலை அர்ச்சித்துப் பூஜித்து வருகையில் ஒரு நாள் பெரியதொரு தாமரைத் தடாகத்தில் அர்ச்சனைக்காகப் பூப்பறிப்பதற்குப் போய் இறங்கி முதலையின்வாயில் அகப்பட்டுக் கொண்டது.) முன்பொருகால், தேவலன் என்னும் முனிவன் ஒரு நீர்நிலையில் நின்று தவஞ்செய்து கொண்டிருந்தபோது ஹூஹூ என்னுங் கந்தர்வன் அம்முனிவனது காலைப்பற்றி யிழுத்தான், அதனால் கோபங்கொண்ட அம்முனிவன் “நீ ஜலஜந்துபோல் மறைந்து வந்து அபசாரப்பட்டதானல் முதலையாகக் கடவை“ என்று சவித்தான். முதலைக்கு சாபமோக்ஷம் உண்டாயிற்று, கஜேந்திரனுக்கு சாபமோக்ஷமும் ஸாகஷாந்மோக்ஷமும் உண்டாயின.

English Translation

O Lord! You have decided that the faithless ones should fall into the throes of fourfold birth. But you also wait for an occasion to relieve them of their curse. Did you not free the waning Moon of his curse? Did you not send your discus spinning and relive both the elephant and the crocodile of their curses?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்