விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  என் நெஞ்சம் மேயான்*  என் சென்னியான்,*  தானவனை-
  வல் நெஞ்சம்*  கீண்ட மணி வண்ணன்,*  முன்னம் சேய்-
  ஊழியான்*  ஊழி பெயர்த்தான்,*  உலகு ஏத்தும்-
  ஆழியான்*  அத்தியூரான்.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தானவனை – இரணியனாகிற அகரனுடைய
வல் நெஞ்சம் – வலிய மார்வை
கீண்ட – கிழித்தொழித்தவனும்
மணி வண்ணன் – நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனும்
முன்னம் செய் ஊழியான் – நெடுங்காலமாக வுள்ளவனும்

விளக்க உரை

பெருமாள் கோயில் ஸ்ரீஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதமான பேர்ருளாளனை மங்களாசரஸநம் பண்ணும் பாசுரங்கள் – இப்பாட்டும் மேற்பாட்டும். ‘எங்குமுளன் கண்ணன்‘ என்று சொன்ன ப்ரஹ்லாதாழ்வானைப் பலபடிகளாலும் நலிந்த இரணியாசுரனுடைய முரட்டுடலைப்பினைந்தொழித்தவனும், இவ்விதமாக பக்தபரிபாலனம் செய்யப்பெற்றதனாலே திருமேனி புகர்பெற்றவனும், அநாதிகாலமாகவே பிறப்பிறப்பு மூப்புகள் ஒன்றுமின்றி யிருப்பவனும், ஸகல பதார்த்தங்களையும் இவ்வுலகில் தோன்றுவித்தவனும், உலகத்தவரால் துதிக்கப்பட்டவனாய்த் திருப்பாற்கடலில் துயில் கொண்டிருப்பவனுமான எம்பெருமான் அத்தியூர் என்னப்படுகிற ஸ்ரீஹஸ்திகிரி க்ஷேத்ரத்தில் எழுந்தருளியிராநின்றான், அவன் இன்று எனது நெஞ்சினுள்ளும் தலையின் மீதும் வந்து சேர்ந்து மகிழ்விக்கின்றான் காண்மின் என்கிறார்.

English Translation

My heart's permanent resident has his feet on my head, He is the gem-hued Lord who destroyed the Asura's chest. the first-cause lord of deluge and creations, the discus-wielder, the resident of Attiyur, Kanchi.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்