விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மண்ணுலகம் ஆளேனே*  வானவர்க்கும் வானவனாய்,*
  விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே,*  - நண்ணித்-
  திருமாலை*  செங்கண் நெ.டியானை,*  எங்கள்-
  பெருமானை கைதொழுத பின்             

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

திருமாலை – பிராட்டியினடத்தில் வியாமோஹமுடவனும்
செம் கண் – செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
நெடியானை – ஸர்வேச்வரனுமான
எங்கள் பெருமானை – எம்பெருமானை
நண்ணி – கிட்டி

விளக்க உரை

‘ஆழ்வீர்! நாம் முன்புசெய்த காரியங்களை எடுத்துரைக்கிறீர், அஃது இருக்கட்டும். இப்போது நாம் உமக்குச் செய்யவேண்டிய காரியம் ஏதேனுமுண்டாகில் சொல்லிக் காணீர்‘ என்று ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் அருளிச்செய்ய, பிரானே! உன்னை ஆச்ரயித்தபோதே எல்லாப் புருஷார்த்தங்களும் பெற்றேனோனேன்காண், மண்ணுலகத்தோடு விண்ணுலகத்தோடு வாசியற உபயவிபூதியும் நானிட்டவழக்காம்படி ஆள்வதற்கு உதியேனானபின்! இனி எனக்குச் செய்யவேண்டுவதொன்றுண்டோ? என்றாராயிற்று.

English Translation

Our Lord has lotus eyes. He is the Master of all, He bears the lady sri on his chest. Though I worship him, it is not for gaining Earthly kingship nor even for the celestial kingdom of Indra, king of gods.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்