விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  திறம்பிற்று இனி அறிந்தேன்*  தென் அரங்கத்து எந்தை,*
  திறம்பா வழிச் சென்றார்க்கு அல்லால்,*  - திறம்பாச்-
  செடி நரகை நீக்கி*  தாம் செல்வதன் முன்,*  வானோர்-
  கடி நகர வாசல் கதவு.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தென் அரங்கத்து எந்தை – தென்னரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கு மெம்பெருமானுடைய
திறம்பா வழி – பிசகாத மார்க்கத்திலே (அவனே உபாயோபேயம் என்னும் நெறியிலே)
சென்றார்க்கு அல்லால் – நிற்பவர்களுக்குத் தவிர (மற்றை யோர்க்கு)
தாம் – தாமாகவே
திறம்பா செடி நரகை நீக்கி – அறுக்கமுடியாத புதர்போன்ற ஸம்ஸார பந்தங்களை அறுத்துக்கொண்டு

விளக்க உரை

எம்பெருமானே வேறொன்றை எதிர்பாரத உபாயபூதன் என்று நன்குணர்ந்து அவ்வுணர்ச்சியின்படியே நடந்து கொள்ளுமவர்களே ஸம்ஸாரபந்தத்தை அறுத்துக்கொண்டு வைகுந்த நின்வாசலினுள்ளே புகப்பெறுவர், மற்றையோர்களுக்கு வைகுந்த வாசற்கதவு திறவாதே மூடிக்கொள்ளு மென்கிறார். திறம்பிற்று –எதிர்காலப்பொருளில் இறந்தகாலமாகச் சொன்னது காலவழுவமைதி.

English Translation

The Lord of Arangam, my Father, clears the path of hellish thickets and opens the portal doors of his citadel for those who tread the path of worship. For others, he closes the doors. I know this now.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்