விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வடிக் கோல வாள் நெடுங் கண்*  மா மலராள்,*  செவ்விப்-
    படிக் கோலம்*  கண்டு அகலாள் பல்நாள்,*  - அடிக்கோலி-
    ஞாலத்தாள் பின்னும்*  நலம் புரிந்தது என்கொலோ,*
    கோலத்தால் இல்லை குறை.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வடிகோலம் – வடிக்கட்டின அழகையுடையவளும்
வாளநெடுங்கண் – ஒளி பொருந்திய நீண்ட திருக்கண்களை யுடையவளும்
மாமலராள் – சிறந்த தாமரை மலரில் பிறந்தவளுமான பெரிய பிராட்டியார்
செல்வி படிகோலம் – சிறப்புற்ற (அவனது) திருமேனியின் அழகை கண்ணால் அநுபவித்து

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “நாரணனைக் கண்டேன்“ என்றாரே, ப்ரஹ்மசாரி நாராயணனைக் கண்டேனல்லேன், திருமடந்தை மண்மடந்தைகட்குக் கொழுநனான திருமாலைக் கண்டேனென்கிறார் இதில். இவ்வார்த்தை நேரே அருளிச்செய்யாமல் ஒரு சமத்காரம் பொலியப் பேசுகிற அழகு காண்மின். பூவிற்பிறந்த பெரிய பிராட்டியார் எம்பெருமானுடைய அளவிறந்த போக்யதையிலே ஆழங்காற்பட்டு ‘உன்னை ஒரு நொடிபொழுதும் விட்டுப்பிரியமாட்டேன். உன்னை ஒரு நொடிப்பொழுதும் விட்டு அகலமாட்டேன்‘ என்றே வாய்வெருவிக்கொண்டு அவனுடைய போக்யதையாகிற அமுத வெள்ளத்திலே கிடந்து தத்தளிக்கின்றாள். அநுபவத்தில் பெரிய கைகாரியான பிராட்டியின் நிலைமையே இதுவாயின் அவளிலும கீழ்ப்பட்டவளான பூமிப்பிராட்டி ‘நாம் அணுகுவதற்கும் நமக்கு யோக்யதையில்லை, ஒன்றான பிராட்டியே குமிழ் நீருண்ணும் விஷயத்திலே நாம் கைவைக்கத்தகுமோ? என்று உதாஸீநையாய் விலக வேண்டியிருக்கவும் அந்த எம்பெருமான் விஷயத்திலே தானும் அபிநிவேசங்கொண்டு அணுகுகின்றாளே, இஃது என்கொல்?

English Translation

The radiant lotus-dame Lakshmi with beautiful vel-sharp long eyes enjoys the blossom-like beauty of the Lord since time immemorial, yet never satiates. And over this, Bhu-dame also finds a niche to sit and enjoy the lord. How so? Because the Lord's beauty is limitless.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்