விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உறும் கண்டாய் நல் நெஞ்சே!*  உத்தமன் நல் பாதம்,* 
  உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால்,*  - உறும் கண்டாய்- 
  ஏத்திப் பணிந்து அவன் பேர்*  ஈர் ஐஞ்ஞூறு எப்பொழுதும்,* 
  சாத்தி உரைத்தல் தவம்.             

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நல் நெஞ்சே – நல்ல மனமே!
உத்தமன் – புருஷோத்தமனுடைய
நல் பாதம் – சிறந்த திருவடிகள்
உறும் கண்டாய் – நமக்கு ப்ராப்த மானவை காண்க (அப்படிப்பட்ட திருவடிகளை)
ஓண் கமலம் தன்னால் – அழகிய தாமரை மலர்களினால் (ஆராதிப்பதானது)

விளக்க உரை

நான் சொல்வதைக் கேட்டு அதன்படியே நடக்கும் நன்னெஞ்சமே! உனக்கு ஹிதமானவற்றைச் சொல்லுகின்றேன், கேளாய், யோக்யர் அயோக்யர் என்று வாசிபாராதே எல்லாரையும் ஆட்படுத்திக்கொள்ளுகையாகிற சிறந்த குணம் வாய்ந்த புருஷோத்தமனுடைய திருவடிகளே நமக்கு ப்ராப்தமென்று கொள், அன்னவனது அத்திருவடிகளைத் தாமரைமலர் முதலிய நன்மலர்களால் ஆராதிப்பது ஸ்வரூபப்ராப்தம் என்று கொள், அவனையே வாயாரத்துதித்துத் தலையாரவணங்கிப் பேராயிரமும் ஓதுவதே நமக்குத் தவம் என்று கொள் – என்றாராயிற்று.

English Translation

His feet will come of their own accord. Know if, O Heart! The lotus-dame Lakshmi's grace too will accrue of its own accord. Even the penance of reciting his thousand names with worship and praise will accrue of its kown accord!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்