விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  யானே தவம் செய்தேன்*  ஏழ் பிறப்பும் எப்பொழுதும்,* 
  யானே தவம் உடையேன் எம் பெருமான்,*  - யானே-
  இருந் தமிழ் நல் மாலை*  இணை அடிக்கே சொன்னேன்,* 
  பெருந் தமிழன் நல்லேன் பெருகு.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எம்பெருமான் – ஸர்வஸவாமிந்!
ஏழ் பிறப்பும் – எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும் – எல்லா அவஸ்தைகளிலும்
தவம் செய்தேன் – தவம் புரிந்தவன்
யானே – நானே

விளக்க உரை

விஷயாந்தரங்களிலே மண்டி உண்டியே உடையே உகந்தோடும் இம்மண்டலத்தார் நடுவே தாம் அப்படியிராமல் எம்பெருமானுக்கே தொண்டுசெய்து திரியும்படியான பாக்கியம் பெற்றமை நினைக்குங்கால், இவ்விருள்தருமா ஞாலத்திலும் நமக்கு இப்படிப்பட்ட நற்காலக்ஷேபம் வாய்த்ததே! என்கிற ஸந்தோஷமிகுதியினால் ‘இல்லையெனக்கெதி ரில்லையெனக்கெதி ரில்லையெனக்கெதிரே‘ என்றாற்போன்ற வாசகங்கள் பரவசமாகவே வெளிவருவதுண்டு, இவ்வநுஸந்தாநம் ஹேயமான அஹங்காரத்தின் பாற்படாது, உத்தேச்யமான அஹங்காரமேயாம். அஃது இப்பாட்டில் விளங்காநிற்கும். காயிலே தின்றும் கானிலுறைந்தும் தீயிடை நின்றும் பூவலம் வந்தும் திரிகின்றசிலர், தங்களையே மஹாதபஸ்விகளாக நினைத்துக் கொள்ளுகின்றனர். உண்மையில், எம்பெருமானை இடைவிடாது சிந்தித்தும் இப்படிப்பட்ட இனிய தமிழ்ப்பாசுரங்களைப் பாடியும் அநுபவிக்கின்ற தானே தவஞ்செய்தவனாவேன், தவத்தின் பலனைப் பெற்றவனும் நானேயாவேன் – என்கிறார்.

English Translation

O Lord! Through seven lives and forever. I alone have done penance, I alone have received the fruits of penance. On your perfectly matching feet, I have sung this garland of sweet Tamil Songs, I am indeed the Greatest Tamil poet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்