- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கீழ்ப்பாட்டில் எம்பெருமானை ஆச்ரயித்தேனென்று அருளிச்செய்தவர் ‘அவ்வெம்பெருமானே எல்லார்க்கும் ஆச்ரயணீயன்‘ என்று தெரிவிக்க வேண்டி அவனுடைய மேன்மையைத் தெரிவித்தற் பொருட்டு அரனுடைய சாபத்தைத் தீர்த்தருளின கதையை எடுத்துரைக்கிறாரிதில். முன்னொருகாலத்தில் பரமசிவன் தன்னைப்போலவே பிரமனும் ஐந்து தலையுடையனாயிருப்பது பலரும் பார்த்த மயங்குதற்கு இடமாயிருக்கின்றதென்று கருதி அவனத சிரயொன்றைக் கிள்ளியெடுத்துவிட, அக்கபாலம் அப்படியெ சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுதலும் அவன் ‘இதற்கு என்செய்வது!‘ என்று கவலைப்பட தேவர்களும் முனிவர்களும், ‘இப்பாவந்தொலைய பிச்சையெடுக்கவேண்டும் என்றைக்கு கபாலம் நிறையுமோ, அன்றைக்கே இது கையைவிட்டு அகலும், என்று உரைக்க, சிவபிரான் பல காலம் பல தலங்களிலுஞ் சென்று பிச்சை யேற்றுக் கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நிறையப்பெறாமையால் நீங்காமற்போகவே, பின்பு ஒரு நாள் பதரிகாச்ரமத்தையடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி இரந்தபோது அப்பெருமான் ‘அக்ஷயம்‘ என்று பிக்ஷையிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது என்ற வரலாறு இங்கு அறியத்தக்கது.
English Translation
The Lord who destroyed seven bulls also filled the hot-tempered but-rider Siva's begging bowl of Brahma's vulture-eaten skull with the blood of his heart and rid him of his curse. But that is an epic story.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்