விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உணர்ந்தாய் மறை நான்கும்*  ஓதினாய் நீதி* 
    மணந்தாய் மலர் மகள் தோள் மாலே!*  - மணந்தாய் போய்-
    வேய் இரும் சாரல்*  வியல் இரு ஞாலம் சூழ்,* 
    மா இரும் சோலை மலை.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாலே – ஸர்வேச்வரனே!
மறை நான்கும் – நான்கு வேதங்களையும்
உணர்ந்தாய் – (பிரளயந்தோறும்) ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருந்து பிறகு வெளியிடுகின்றாய்
நீதி – அந்த வேதங்களின் பொருளை விவரிக்க வல்ல ஸ்ம்ருதி முதலிய உபப்ரும்ஹண நூல்களையும்
ஓதினாய் – (மநுமுதலிய மஹர்ஷிகள் முகமாக) அருளிச்செய்கின்றாய்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “உளங்கிடந்த வாற்றாலுணர்ந்து“ என்றதை விவரிப்பது போலும் இப்பாட்டு. ‘அன்பர் மறக்க முடியாதபடி அவர்களுடைய நெஞ்சைக் கொள்ளை கொண்டிருக்கு முபகாரம் நான் என்ன செய்திருக்கிறேன்?‘ என்று எம்பெருமான் கேட்பதாகக் கொண்டு, பிரானே! நீ செய்தருளின மஹோபகாரங்கள் சொல்லாற் கூறும்பரமோ? கண்ணில்லாதவர்களுக்குக் கண் கொடுத்தாற்போலே வேதங்களையெல்லாம் வெளியிட்டருளினாய். அந்த வேதங்களின் அரும்பெரும் பொருள்களை விவரிப்பனவாய் வேதோபப்ரும்ஹணமென்று பேர்பெற்றனவான் ஸ்ம்ருதீதிஹாஸ புராணதிகளையும் முனிவர்களைக் கொண்டு பிரவசதும் செய்தருளினாய், ஆச்ரீதர்களுடைய குற்றங்களையும் நற்றமாக உபபாதிக்கவல்ல பெரிய பிராட்டியான ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாதிருக்கின்றாய், திருமலை முதலிய திருப்பதிகளிலே படுகாடு கிடக்கின்றாய், இப்படியாக நீ செய்தருளும் பெருநன்றிகளுக்கு எல்லையுண்டோ, என்றாராயிற்று. உணர்ந்தாய் மறைநான்கும் – வேதங்கள் எம்பெருமானால் ஸ்ருஷ்டிக்கப்பட்டனவென்று சிலர் மயங்கிக்கிடப்பதுண்டு, ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் எம்பெருமான் நான்முகனுக்கு வேதோபதேசம் செய்வதாகச் சொல்லப்படுகிறதே, ஸ்ருஷ்டிக்கு முன்பு வேதம் இருக்கமுடியாதே, ஆதலால் ஈச்வரனால்தான் வேதம் செய்யப்பட்டிருக்கவேணும் என்று சில வைதிகர்களுங்கூட மயங்குவதுண்டு. உண்மை யாதெனில், வேதத்துக்கு நாம் எப்படி கர்த்தாக்களல்லவோ அப்படியே எம்பெருமானும் கர்த்தாவல்லன், உலகத்தின் ஸ்ருஷ்டியானது ஒன்றன்பின் ஒன்றாக ஆநாதிகாலமாய் நடந்து வருகிறது.

English Translation

O Lord! Your revealed the four vedas. You spoke the Dharma of the life. You took the lotus-dame Lakshmi in your embrace. You have made your abode amid Bamboo groves in the venkatam hills!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்