விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பயின்றது அரங்கம் திருக்கோட்டி,*  பல் நாள்-
  பயின்றதுவும்*  வேங்கடமே பல்நாள்,*  - பயின்றது-
  அணி திகழும் சோலை*  அணி நீர் மலையே* 
  மணி திகழும் வண் தடக்கை மால். 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மணி திகழும் – நீலமணிபோல் விளங்குமவனும்
வண் தடகை – உதாரமாய் நீண்ட திருக்கைகளை உடையனுமான
மால் – எம்பெருமான்
பயின்றது – நித்யவாஸம் செய்தருளுமிடம்
அரங்கம் திருக்கோட்டி – திருவரங்கமும் திருக்கோட்டியூருமாம்

விளக்க உரை

பாகவதர்கள் லாபநஷ்டங்களில் உகப்பும் வெறுப்புங் கொள்ளாதிருக்கும்படி எம்பெருமான் பல திவ்யதேசங்களில் ஸ்ந்நிதிபண்ணி க்ருஷி பண்ணினானாகையாலே அப்படிப்பட்ட திவ்யதேசங்களில் சிலவற்றைப்பேசி அநுபவிக்கிறார். திருவரங்கம் பெரிய கோவில், திருக்கோட்டியூர், திருவேங்கடம் அநுநீர்மலை என்னுமித் திருப்பதிகளிலே எம்பெருமான் நெடுங்காலமாக வாழ்கின்றானென்கிறார். ஆச்ரிதர்கள் திருந்துவதற்காக எம்பெருமான் உகந்து வர்த்திக்கும் திருப்பதிகள் இங்ஙனே பல்லாயிரமுள்ளன, அவற்றுக்கு ஓர் வரையறையில்லை – என்றவாறு. “அணிதிகழுஞ் சோலை“ என்றதை நீர்மலைக்கு விசேஷணமாக்காமல் தனிவிசேஷயமாகக் கொண்டு திருமாலிருஞ்சோலை யென்றுரைத்தலு மொக்கும்.

English Translation

The generous adorable Lord of dark-gem-hue is an old resident of Arangam. Tirukottiyur and Tiruvenkatam are also his inheritances. The beautiful Malirumsolai and even the beautiful Tirnirmalai are ancient abodes of the Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்