விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வானத்து எழுந்த*  மழை முகில் போல்*
  எங்கும் கானத்து மேய்ந்து*  களித்து விளையாடி* 
  ஏனத்து உருவாய்*  இடந்த இம் மண்ணினைத்* 
  தானத்தே வைத்தானால் இன்று முற்றும் 
   தரணி இடந்தானால் இன்று முற்றும் 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஏனத்து உரு ஆய் - ஒரு வராஹத்தின் ரூபமாய் (அவதரித்து);
கானத்து - காடு நிலங்களில்;
எங்கும் - எல்லாவிடத்திலும் (திரிந்து);
மேய்ந்து - (கோரைக்கிழங்கு முதலியவற்றை) அமுது செய்து;
களித்து - செருக்கடைந்து;

விளக்க உரை

’வானத்தெழுந்த மழைமுகில்போல் எனத்துருவாய் தரணி இடந்தானால் இன்றுமுற்றும்; இடந்தவிம்மண்ணினைத் தானத்தே வைத்துக் கானத்து எங்கும் மேய்ந்து களித்து விளையாடினானால் இன்று முற்றும்’ என்றும் இரண்டு வாக்கியார்த்ட்ட்தமாக்கிப் பொருள்கொள்ளுதல் நன்று; வைத்தானால் என்றவிடத்துள்ள மூன்றாம்வேற்றுமையுருபைப் பிரித்து விளையாடி என்ற வ்னையெச்சத்தோடு கூட்டி உரைத்தவாறு. முன் ஒரு காலத்தில் பூமியைப் பாயாகச்சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிப்போன ஹிரண்யாக்ஷனைத் திருமால் தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால் மஹாவராஹமாகத் திருவவதரித்துக்கொன்று பூமியைக்கோட்டாற் குத்தியெடுத்துக் கொண்டுவந்து பழையபடி வித்தருளினன் என்ற வரலாற்றை அநுஸந்தித்து இப்படி பிரளயாபந்நையான பூமியை எடுத்தவன் எங்களை விரஹப்ரளயத்தே தள்ளி வருத்தா நிற்பானே! என்று வயிறெரிகின்றனர். [இப்பொழுது நடக்கிற சுவேதவராஹ கல்பத்துக்கு முந்தின பாத்ம கல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில் திருமால் பிரளயப்பெருங்கடலில் மூழ்கியிருந்த பூமியை மேலேயெடுக்க நினைத்து ஸ்ரீவராஹரூபன்கொண்டருளிக் கோட்டுநுனியாலே பூமியை எடுத்துவந்தனனென்றும் அதுபற்றி இக்கல்பத்துக்கு வராஹகல்பமென்று பெயராயிற்று என்றும் புராணவரலாறு உண்டு.] கானம்-காநகம்.

English Translation

Like dark rain-clouds gathered in the sky, he came as a boar with a big grunt and played delightedly in the forest, and like digging out a tuber, brought out the Earth from the deep waters. Today we are finished,--by the Lord who lifted the Earth,--O, We are finished.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்