விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தாழ்ந்து வரம் கொண்டு*  தக்க வகைகளால்*
  வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும்,*  - தாழ்ந்த-
  விளங் கனிக்குக்*  கன்று எறிந்து வேற்று உருவாய்,*  ஞாலம்-
  அளந்து அடிக்கீழ்க் கொண்ட அவன்.       

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தாழ்ந்த - (பழத்தின் கனத்தினால் கிளைகள்) தாழ்ந்து கிடந்த
விளா - விளாமரத்தினுடைய
கனிக்கு - பழங்களை உதிர்ப்பதற்காக
கன்று - கன்றை (எறிகோலாகக் கொண்டு) வீசியெறிந்தவனாயும்
வேறு உரு ஆய் -(திருமாலான தன்னுடைய வடிவத்தை விட்டு யாசகனான வாமன மூர்த்தி வடிவமாய்

விளக்க உரை

எம்பெருமான் தன்னை ஆச்ரயிப்பவர்களின் இடையூறுகளைத் தொலைத்து அவரவர் மேன்மேலும் விரும்புகின்ற இஷ்டங்களையுந் தந்தருள்வனென்கிறது. பின்னடிகளில் கபித்தாஸுர வத்ஸாஸுரர்களைக் கொன்றழித்ததையும் மாவலியின் கொழுப்பையடக்கியதையும் பேசினதன் கருத்தாவது - துரஹங்சாரியான மாவலியின் கையில் அகப்பட்டக் கிடந்த பூமியைத் தன் திருவடிகளிலே கொண்டு வாழ்வித்தவன், வணங்கினவர்களின் விரோதிகள் கபித்தாஸுரனும் வத்ஸாஸரனும் பட்டபாடுபாடும்படி போக்கிக் கர்ப்பனென்பதாம். வேற்றுருவாய் -திருமகள் கொழுநனாயிருக்கும் உருவத்தை விட்டு யாசக ப்ரஹ்மசாரியின் உருவத்தை யேறிட்டுக்கொண்டு என்றபடி. அன்றி, இரக்கும் போது சிறியகாலைக்காட்டி, அளக்கும்போது பெரியகாலைக் கொண்டு என்றுமாம்.

English Translation

Bowing low with proper respect the lord came in disguise and took the Earth under his feet. He destroyed the wood-apple free throwing a calf against it. He gives life to his devotees.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்