விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உகந்து உன்னை வாங்கி*  ஒளி நிறம் கொள் கொங்கை* 
  அகம் குளிர உண் என்றாள் ஆவி,*  உகந்து- 
  முலை உண்பாய் போலே*  முனிந்து உண்டாய்,*  நீயும்-
  அலை பண்பால் ஆனமையால் அன்று.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆனமையால் - ஆகையினாலே,
அன்று - அவள் முலைதந்த; அக்காலத்தில்
நீயும் - சிறு குழந்தையான நீயும்
அலை பண்பால் - அலையெறிகிற (அதிகமான) உன் ஸௌலப்ய குணத்தினாலே
முலை உண்பாய் போலே - மெய்யே ஸ்தன்யபானஞ்செய்பவனைப் போலே

விளக்க உரை

பேய்ச்சியின் முலைப்பாலை அமுதமாகவுண்ட கதையை அநுஸந்தித்து ஈடுபடுகிறார். கண்ணபிரானைப்பெற்ற தாயான தேவகியினது உடன்பிறந்தவனாய் அக்கண்ணபிரானுக்கு மாமனாகிய கம்ஸன், தன்னைக் கொல்லப்பிறந்த தேவகீபுத்திரன் ஒளித்து வளர்தலையறிந்து, அக்குழந்தையை நாடியுணர்ந்து கொல்லும்பொருட்டுப் பல அசுரர்களை ஏவ, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த க்ருஷ்ண சிசுவையெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்ல முயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப் பிடித்துப் பாலுண்கிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தானென்பது கதை. வந்த பேய்ச்சி யசோதையான பாவனையோடு வந்தாவாகையாலே அவளுடைய பரிவு போன்ற பரிவை ஏறிட்டுக்கொண்டது பற்றி ‘உகந்து’ எனப்பட்டது. 1. “ஒரு முலையை வாய்மடுத்து ஒரு முலையை நெருடிக்கொண்டு, இரு முலையும் முறை முறையா ஏங்கியேங்கி யிருந்துணாயே” என்னும்படியாகப் பால் விம்மியிருந்ததனால் ‘ஒளிநிறங் கொள்கொங்கை’ எனப்பட்டது. ,. “நந்தன் பெறப்பெற்ற நம்பீ! நானுகந்துண்ணுமமுதே! எந்தை பெருமானே! உண்ணாய் என்னம்மம் சேமமுண்ணாயே” ‘. “உருகியென் கொங்கையின் தீம்பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற மருவிக்குடங்காலிருந்து வாய்முலையுண்ண நீவாராய்’ என்று யசோதை ஆவலோடு சொல்லுமா போலே பூதனையும் சொன்னமைதோற்ற ‘அகங்குளிரவுண்ணென்றாள்’ எனப்பட்டது. அவள் தாயான பாவனையிலே எவ்வளவு அன்பு அபிநயித்தாளோ, அவ்வளவு அன்பை இவனும் மகனான பாவனையிலே அபிநயித்தமை தோற்ற “உகந்து முலையுண்பாய்போலே” எனப்பட்டது. ஈற்றடியிலுள்ள “ஆனமையால்” என்பதை இரண்டாமடியிற் கூட்டிக்கொள்க.

English Translation

Joyously taking you to her poisoned breasts, the ogress gave you suck, as if you were on innocent child. But you took her breast milk and her life then!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்