- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமானுடைய திருவடிகளை நாம் ஸாக்ஷாத்கரிக்கப் பெறவேண்டில் அதற்கு அவனையே உபாயமாகக் கொள்ள வேணுமென்கிறது. “மாயவனையே மனத்து வை” என்றது எம்பெருமானொருவனையே உபாயமாகக் குறிக்கொள் என்றபடி. அப்படி அவனையே உபாயமாகக் கொண்டால் அவனுடைய உபயபாதங்களையும் ஸேவிக்கப் பெறுகை நமக்கு எளிதாம் என்றாராயிற்று. இப்பாட்டின் முதலிலுள்ள ‘ஓரடியும்’என்பதற்கு ‘உலகளந்த ஒரு திருவடியும்’ என்று பொருளுரைத்தது- மேலே “ஓரடியின் தாயவனை” என்பதற்கேற்ப. கீழும் மேலும் பரவி இரண்டு திருவடிகளுமே உலகளந்தன வாதலால் அத்திருவடியிணையை யெடுத்துக்கூறாது சகடாஸுரனை யுதைத்துத் தள்ளின திருவடியைக் கூட்டிக்கொண்டதென் னென்னில்; விரோதி நிரஸநஞ் செய்யும் வல்லமையுடைமை தோற்றுதற்காக வென்க. உலகளந்த திருவடியானது எல்லார் தலையிலும் ஏறி வீற்றிருந்து இஷ்டப்ராப்தி செய்வித்தது; சாடுதைத்த திருவடியானது சகடாஸுரனுடைய வஞ்சனையில் நின்றும் (கண்ணபிரானாகிய ) தன்னைத் தப்புவித்த முகத்தால் அநிஷ்ட நிவ்ருத்தி செய்வித்தது; ஆகவே இஷ்டத்தை நிறைவேற்றுவித்து அநிஷ்ட்த்தை ஒழித்திடவல்ல திருவடிகளையுடையன் எம்பெருமான் என்று காட்டினாராயிற்று. எம்பெருமானுடைய அவதாரங்கள் பலவற்றினுள்ளும் த்ரிவிக்ரமாவதாரமும் க்ருஷ்ணாவதாரமுமே இவ்வாழ்வார் தாம் மிகவும் ஈடுபட்ட துறைகள் என்பதை விளக்குதற்கே உலகளந்த திருவடியையும் சாடுதைத்த திருவடியையும் பேசிப் பிரபந்த்த்தை முடித்தருளினாரென்று பெரியோர் நிர்வஹிக்கும்படி. பின்னடியிலும் “தாயவனைக் கேசவனை” என்றது காண்க. உபாயமும் உபேயமும் எம்பெருமானே; சைதந்ய கார்யமான இந்த அத்யவஸாயமொன்றே நமக்கு வேண்டியது-என்று அருளிச்செய்து தலைக்கட்டினாராயிற்று.
English Translation
O Heart! Always worship the lord who wears the coal Tulasi garland, the wonder-child who kicked a cart with his foot, kesava the lord who measured the Earth with his one foot. You can see both his feet on Earth.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்