விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உளன்கண்டாய் நல்நெஞ்சே!*  உத்தமன் என்றும்-
    உளன்கண்டாய்,*  உள்ளுவார் உள்ளத்து- உளன்கண்டாய்,*
    வெள்ளத்தின் உள்ளானும்*  வேங்கடத்து மேயானும்,* 
    உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உள்ளுவார் உள்ளத்து - ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன் - நித்யவாளம்
கண்டாய் - பண்ணுமவன் காண்;
வெள்ளத்தின்  உள்ளானும் - திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருள்பவனும்
வேங்கடத்து மேயானும் - திருமலையிலே நிற்பவனும்

விளக்க உரை

தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுகின்றார். திருப்பாற்கடல் திருவேங்கடம் முதலிய இடங்கள் எம்பெருமானுக்கு வாஸஸ்தலங்களாயினும் அவ்விடங்களில் எம்பெருமான் வஸிப்பதானது ஸமயம்பார்த்து ஞானிகளின் மனத்திலே புகுவதற் காகவேயாம். ஸ்ரீவாநபூஷனத்தில்— “திருமாலிருஞ்சோலைமலையே என்கிறபடியே உகந்தருளின நிலங்களெல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீரைத் தேகத்திலே பன்ணும்; அங்குத்தை வாஸம் ஸாதாநம்; இங்குத்தை வாஸம் ஸாத்யம்; ‘கல்லுங் கனைகடலும்’ என்கிறபடியே இதுஸித்தித்தால் அவற்றிலாதரம் மட்டமாயிருக்கும்” என்ற ஸ்ரீஸூக்திகள் காண்க. நெஞ்சே! ஸர்வரக்ஷகனான ஸர்வேச்வரன் திருப்பாற்கடல் திருமலை முதலிய இடங்களில் வந்து தங்கினது விலக்காதார் நெஞ்சில் வந்து புகுவதற்காகவேயாதலால் அவன் இப்போது நம்முடைய நெஞ்சில் ஆதரவோடு நித்யவாஸம் பண்ணலானான், இதனை நீ அறிந்து உவந்திரு என்கிறார். இதோ, நன்னெஞ்சே! என்று நெஞ்சை விளித்து ‘உள்ளத்தினுள்ளா னென்றோர்’ என்றது எங்ஙனே பொருந்தும்? நெஞ்சமும் உள்ளமும் ஒன்றுதானே; நெஞ்சுக்கும் ஒரு உள்ளமிருப்பதுபோலச் சொல்லியிருக்கிறதே, இஃது ஏன்? என்னில்; இது மிகச் சிறிய கேள்வி; தம்மிற்காட்டில் நெஞ்சை வேறுபடுத்தி விளிப்பது அதைத் தனிப்பட்ட வொரு வ்யக்தியாக ஆரோபணம் செய்துகொண்டேயாதலால் இதுவும் ஒரு ஆரோபணமேயாம். நெஞ்சு தவிர உசாத்துணையாவார் வேறொருவரு மில்லாமையால் நெஞ்சை விளித்துச் சொல்லுகிறதித்தனை.

English Translation

See, the supreme ford exists. Always he exists. In the hearts of devotees. In the ocean of milk, in venkatam, and in you, the Lord exists. O Heart of mine!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்