விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொன்திகழும் மேனிப்*  புரிசடைஅம் புண்ணியனும்,* 
    நின்றுஉலகம் தாய நெடுமாலும்,* - என்றும்-
    இருவர்அங்கத்தால் திரிவரேலும்,*  ஒருவன்-
    ஒருவன் அங்கத்து என்றும் உளன்.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இருவர்  அங்கத்தால் திரிவர் ஏலும் - இருவராகி வெவ்வெறு வடிவத்தைக்கொண்டு இருந்தார்களேயானாலும்
ஒருவன் - சடைபுனைந்து ஸாதநாநுஷ்டானம் பண்ணு மொருவனாகிய சிவன்
ஒருவன் அங்கத்து - நெடுமாலான மற்றொருவனுடைய சரீரத்திலே
என்றும் - எப்போதும்
உளன் - ஸத்தை பெற்றிருப்பன்.

விளக்க உரை

கீழ்ப்பாட்டில், எம்பெருமானது திருவடியில் தோன்றிய கங்கையைச் சடைமேலே தரித்துக்கொண்டதனாலே ருத்ரன் பாதகம் நீங்கிப் பரிசுத்தனாயினானென்றது; இப்படி ஏன் சொல்லவேண்டும்? இதனால் ருத்ரனுக்கொருகுறை சொல்லலாமோ? அவனும் ஒரு ஸம்ஹாரக் கடவுளென்று பேர்பேற்று ஈச்வரனென்று நாட்டில் கெளரவிக்கப் படவில்லையா? என்றொரு கேள்வி பிறக்க, அவனுடைய ஈச்வரத்வம் எம்பெருமானுக்கு சரீரபூதனாகையாலே வந்ததித்தனையொழிய இயற்கையாக இல்லையென்பதை மூதலிக்கக் கருதி இப்பாட்டருளிச் செய்கிறார். அரியும் அரனும் தனித்தனி இரண்டு சரீரங்களை யுடையவராய்த் திரியா நின்றாலும் அரனானவன் அரியினது திருமேனியின் ஒருபுறத்திலே யொதுங்கி ஒரு வஸ்துவாக ஸத்தை பெறுகிறான் என்றதாயிற்று. 1. “ பரன் திறமன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே” என்றார் நம்மாழ்வாரும். “புரிசடையம்புண்ணியன்” என்ற தொடரில் இவனுடைய வேஷமே இவன் ஈச்வரனல்ல னென்பதைக் காட்டுமென்ற கருத்தும், “ நின்றுலகம் தாயநெடுமாலும் “ என்ற தொடரில், ருத்ரன் தலையோடு மற்றவர் தலையோடு வாசியற எல்லார் தலையிலுமாகத் தனது தாளை நீட்டியவனென்பதால் அவனே ஸர்வேச்வரனென்ற கருத்தும் ஸ்பஷ்டமாக விளங்குதல் காண்க ஒருவன் ஒருவனங்கதென்றுமுளன் – “வலத்தனன் திரிபுரமெரித்தவன் “ என்ற திருவாய்மொழியுங் காண்க. “ஒருவனங்கத்து” என்பதற்கு. –ஸ்ரீமந் நாராயணனாகிய ஒருவனுடைய சரீரத்தின் ஏகதேசத்திலே என்றும், சரீர பூதனாகி என்றும் பொருள் கொள்வர்.

English Translation

The golden hued Lord moves around as two forms, -the mat-haired Siva and the Earth. Measuring Nedumal. And yet the one is always contained in the other, see!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்