- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கீழ்ப்பாட்டில் “ அறம்பாவ மென்றிரண்டு மாவான்” என்றருளிச் செய்ததற்கு விவரணம் போலும் இப்பாட்டு. புண்யமும் பாபமும் அவனிட்ட வழக்காயிருக்குமென்றிறே கீழ்ப்பாட்டிற்சொல்லிற்று; அப்படி எங்கே கண்டோமென்ன, இரண்டுக்கும் இரண்டு வ்ருத்தாந்தங்கள் காட்டுகிறாரிதில்; ஸ்ரீ கஜேந்திராழ்வானை முதலை வாயினின்றும் விடுவித்துக் காத்தருளினமை ப்ரஸித்தம். அக்களிறு பூர்வஜந்மவாஸநையினால் பகவத்பக்தி மாறாதிருக்கப் பெற்றாலும் மற்றுள்ள காட்டானைகள் போலே விஷயப்ரவணமுமாய்த் திரிந்துக்கொண்டிருந்தமை பற்றிப் பிடிசேர்களிறு என்றார். [பிடி- யானையின்பேடை.] சாபத்தின் பலனாகப் பாபயோநியிற் பிறவிபெற்ற அவ்யானைக்கும் அருள் செய்யக் காண்கையாலே பாபம் அவனிட்ட வழகாயிருக்குமென்பது பெறப்பட்டது. பாபிஷ்டர்களையும் பரிசுத்தராக்குந் தன்மை கங்கைக்கு எம்பெருமானருளாலே வந்த தென்கையாலே புண்யம் அவனிட்ட வழக்காயிருக்குமென்பது பெறப்பட்டது. “ஆனின் மேயவைந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ” [ சுத்தியை விளைக்கக்கூடிய பதார்த்தங்களுள் முதன்மையாகக் கூறப்படுகிற ’பஞ்சகவ்யமும் பரிசுத்தியும் உனது ஸங்கல்பத்தினாலாயது] என்றார் திருமழிசைப்பிரான்; ‘பஞ்சகவ்யம் பரிசுத்திகரமாகக் கடவது’ என்று ஸங்கல்பித்தது போலே ‘ கங்கை பரிசுத்திகரமாகக் கடவது’ என்றும் ஸக்கல்பித்து வைத்திருக்கையாலே புண்யம் நீயிட்ட வழக்கென்கிறது
English Translation
O Large-hearted Lord who saved the elephant in distress! The ash-ridden fire-wielding siva spills the Ganga-dame from his mat-hair. Do you not bless her with purity by contact with your lotus feet of golden hue?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்