விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எனக்குஆவார்*  ஆர்ஒருவரே,*  எம்பெருமான்-
    தனக்குஆவான்*  தானே மற்றுஅல்லால்,* - புனக்காயாம்-
    பூமேனி காணப்*  பொதிஅவிழும் பூவைப்பூ,* 
    மாமேனி காட்டும் வரம்     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புனம் காயா பூமேனி - தனக்கு உரிய நிலத்தில் தோன்றிய காயாம்பூவின் நிறமும்
காண பொதி அவிழும்  பூவைப்பூ - காணக்காணக் கட்டவிழா நிற்கும் பூவைப்பூவின் நிறமும்
வரம் - சிறந்ததான
மா மேனி - (அவனது) கரிய திருமேனியை
மற்று - அவன்தானும் எனக்கு ஒப்பாகவல்லனோ?

விளக்க உரை

இப்பாட்டும் கீழ்ப்பாட்டிற்கு சேஷபூதம். கீழ்ப்பாட்டில் ஓடின மகிழ்ச்சிப் பெருக்கே இதனிலும் பொலியும். த்ரிகரணங்களும் எம்பெருமான் திறத்தி லீடுபட்டு அடிமைச்சுவையைப் பூர்ணமாக அறிந்த தமக்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லை என்கிறார். தமக்குண்டான ஏற்றத்தைப் பின்னடிகளிற் பேசுகிறார்;- காயாம்பூ, பூவைப்பூ முதலியவற்றைக் கண்டால் ஸாமாந்ய ஜனங்கள் ‘இவை சிலகாட்டுபூக்கள்’ என்று எண்ணி யொழிகின்றனர்; அப்புஷ்பங்களை நான் கண்டாலோ அப்படி எண்ணுவதில்லை; ‘ இவை ஸாக்ஷாத் எம்பெருமானது திருவுருவம்’ என்றே நினைக்கின்றேன்; ஆகவே, இப்படி போலியான பொருள்களைக் கண்டவளவிலும் அப்பெருமானையே கண்டதாக நினைந்து களிக்கின்ற எனக்கு இவ்விபூதியில் நிகராவார் ஆருமில்லையே; எம்பெருமானும் தனக்கு தான் நிகரானவனேயன்றி எனக்கு நிகரல்லன் – என்றாராயிற்று. இப்படி எம்பெருமானது அடிமையி லீடுபட்டு அதன் மூலமான செருக்கைக் கொல்லுதல் அடிக்கழஞ்சு பெறுதலால்தான் “ எனக்கினியார் நிகர் நீணிலத்தே” என்றும் “எனக்காரும் நிகரில்லையே என்றும் மற்றையோரு மருளிச்செய்வது. இவ்வஹங்காரம் ஹேயமன்று ; உபாதேயமேயாம். “பூவையுங் காயாவும் நீலமும் பூக்கின்ற, காவிமலரென்றுங் காண்டோறும், பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவையெல்லாம் பிரானுருவே யென்று” என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரம் இங்கு ஸ்மரிக்கத்தகும்

English Translation

Who is my friend, but the Lord alone? He is his own equal, without a superior. The blossoming Puvai flowers and the wid kaya flowers always remind me of his dark radiant form.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்