விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காப்பு உன்னைஉன்னக்*  கழியும் அருவினைகள்,* 
  ஆப்பு உன்னைஉன்ன அவிழ்ந்தொழியும்* - மூப்புஉன்னைச்-
  சிந்திப்பார்க்கு*  இல்லை திருமாலே,*  நின்அடியை-
  வந்திப்பார்*  காண்பர் வழி. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

காப்பு - பிரதிபந்தகங்கள்
கழியும் - விட்டு நீங்கும்;
உன்னை உன்ன - உன்னை நினைக்கு மளவில்,
அருவினைகள் ஆப்பு - போக்கமுடியாத கருமங்களின் பந்தமும்
அவிழ்ந்து ஒழியும் - அவிழ்ந்துபோம்;

விளக்க உரை

திருமாலே! ஸர்வரக்ஷகனானவுன்னை அநுஸந்திப்பவர்களுக்கு எல்லாப் பிரதிபந்தகங்களும் நீங்கிப் பிரகிருதிஸம்பந்தமும் நீங்கி திவ்யலோகப்ராப்தியும் வாய்க்கு மென்கிறார். பகவத் ஸம்பந்தத்தை யுணர்ந்தவர்கள் கர்மவச்யராகாரெபந்தை முன்னடிகளாலும், பரமசாம்யாபுத்தியை அடைவார்களென்பதைப் பின்னடிகளாலும் அருளிச்செய்கிறார். முதலடியில், காப்பு என்பதற்குப் ‘பிரதிபந்தகம்’ என்று பொருள் கூறப்பட்டது; காவல் என்பதற்குத் ‘தடை’ என்று பொருலாதலால் . அன்றியே, பாபஸாக்ஷியாக எம்பெருமானால் நியமிக்கப்பட்டுள்ள பதினால்வர் என்று கொள்ளவுமாம். அவராவார் – ஸூர்யன் சந்திரன் வாயு அக்நி த்யுலோகம் பூமி ஜலம் ஹ்ருதயம் யமன் அஹஸ்ராத்ரி இரண்டு ஸந்த்யைகள் தர்மதேவதை என்ற இவராவர். *“ஆதித்ய சந்த்ராவநிலோநலச்ச த்யெளர்ப் பூமிராபோ ஹ்ருதயம் யமச்ச- அஹச்ச ராத்ரிச்ச உபேச ஸந்த்யே தர்மச்ச ஜாநாதி நரஸ்ய வ்ருத்தம்.“ என்ற மஹாபாரத ச்லோகமுங் காண்க. உன்னை யநுஸந்திப்பவர்கள் செய்யுங்கருமங்களை எம்பெருமானா லேற்படுத்தப்பட்டுள்ள கர்மஸாக்ஷிகளும் ஆராயக்கடவரல்லர் என்றவாறு. வழி காண்பர்- நரகத்தைபோலே பொல்லாததான வழியைக் காணுதலின்றியே நித்ய விபூதிக்கிப் போம்வழியைக் காண்பரென்றவாறு

English Translation

The heads that worship your feet will always see the path. O Lord Tirumal! those who seek your protection are rid of karmas. Those who seek you are freed of bondage, Those who think of you never grow old.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்