- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எல்லாப் பதார்த்தங்களையும் தரிப்பவன் ஸ்ரீமந்நாராயண னென்றார் கீழ்ப்பாட்டில்: ருத்ரனை அப்படிப்பட்டவனாகச் சிலர் சொல்லுகின்றார்களே! அஃது என்ன? என்று கேள்வி பிறக்க, ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்வத்தையும் சிவனுடைய அபரத்வத்தையுஞ் சொல்லி, சிவனும் எம்பெருமானுடைய ஆளுகையிலே அடங்கினவனே யென்றார். ஏற்றானாயும் எயிலெரித்தானாயும் நீற்றனாயும் கூற்றொருபால் மங்கையானாயும் வார்சடையானாயும் கங்கையானாயு மிருக்கிறரு ருத்ரன் - புள்ளூர்ந்தானாயும் பார்விடந்தானாயும் நிழல்மணி வண்ணத்தானாயும் பூமகளானாயும் நீண்முடியானாயும் நீள்கழலானாயு மிருக்கிற எம்பெருமானுடைய, காப்பு என்று அந்வயிப்பது. காப்பு- ரக்ஷ்யவர்க்கத்திற் சேர்ந்தவன் என்றபடி. சிவனுடைய விசேஷணங்களை வரிசையாக இட்டு, பிறகு எம்பெருமானுடைய, விசேஷணங்களை வரிசையாக இட்டு, இன்னான் இன்னானுடைய காப்பு- என்று அடைவுபடச் சொல்லலாமாயிருக்க , அப்படிச் சொல்லாமல் விஷ்ணு ருத்ரர்களை மாறிமாறித் தொடுத்திருப்பது இருவர்க்குமுள்ள வாசி உடனுக்குடனே தெரியவேணுமென்பதற்காக. தமோகுணமே வடிவெடுத்ததாயும் மூடர்களுக்கு உவமையாக எடுக்கக்கூடியதாயு முள்ள ரிஷபத்தை வாஹநமாக வுடையவன் அவன்; வேதஸ்வரூபியான பெரிய திருவடியை வாஹநமாகவுடையவன் இவன்; தன்னை ஆச்ரயித்தவர்களின் குடியிருப்பான திரிபுரத்தைச் சுட்டெரித்தவன் அவன்; ஆச்ரிதனான ப்ரஹ்லாதனுக்கு விரோதியான இரணியனது மார்வைப் பிளந்தொழித்தவனிவன்; தான் ப்ராயச்சித்தியென்று தோற்றும்படி நீறுபூசின ஸர்வாங்கத்தையு முடையான் அவன்; ச்ரமஹரமான நீலரத்நம்போலே குளிர்ந்த வடிவை யுடையவன் இவன். தன் உடலின் பாதி பாகத்தை ஸ்த்ரீரூபமாக ஆக்கிக்கொண்டவன் அவன்; உலகுக்கெல்லாம் ஈச்வரியான கமலச் செல்வியை திவ்ய மஹிஷியாகவுடையவன் இவன்; தன் குறையைத் தீர்த்துக்கொள்ளும் வண்ணம் ஸாதநாநுஷ்டாநம் பண்ணுவது எல்லர்க்குந் தெரியும்படி சடை புனைந்தவன் அவன்; ஸர்வேச்வரத்வ ஸூசகமான திருவபிஷேகத்தையுடையவன் இவன்; தான் பரிசுத்தனாவதற்குக் கங்கையைத்தரிப்பவன் அவன்; அந்தக் கங்கைக்கு உத்பத்தி ஸ்தாநமான திருவடியை யுடையவன் இவன் – என்று சொல்லுமழகு காண்மின்.
English Translation
The Lord, -whose mount is the Garuda bird, who tore Hiranya's chest, who has a dark gem-hue, who keeps the lotus dame on his chest, who wears a tall crown, and who raised his foot high that Brahma washed, -protects Siva, who rides the bull, destroyed the three cities, wears ash, is woman-by-half, wears mat-hair, and took the Ganga waters on his head.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்