- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
“சஞ்சலம் ஹி மந:கிருஷ்ண!” என்றும் 2. “நின்றவா ரில்லாநெஞ்சு” என்றுஞ்சொல்லுகிறபடியே நெஞ்சின் நிலைமை மாறிமாறி கொண்டேயிருக்குமென்பதை நினைத்த ஆழ்வார், ‘நெஞ்சே! நீ எப்போதும் ஒரே நிலையாயிருந்து எம்பெருமானைப் புகழ்வதும் ஆதரிப்பதுமாயிருந்தாலும் சரி; நிலைமாறிச் சிசுபாலாதிகளைப்போலே அவனைப் பழிப்பதும் அநாதரிப்பதுமாயிருந்தாலும் சரி; நீ எது செய்தாலும் அவனுடைய பெருமேன்மைக்குக் குறைவு நிறைவுகள் வாராதுகாண்’ என்று தம்முடைய உறுதியைத் தெரிவிக்கிறார் பின்னடிகளில், எம்பெருமான் கார்ய காரண ரூபங்களான ஸகல பதார்த்தங்களையும் தரித்துக்கொண்டிருப்பவன் என்று அவனுடைய ஸர்வதாரகத்வத்தை சொன்னதானது நம்முடைய புகழ்வு மிகழ்வுமெல்லாம் அவனுக்கு அப்ரயோஜகம் என்கைக்காகவென்க. ஏற்றான் – எல்லாம் தானென்கிற சொல்லுக்குள்ளே அடங்கும்படி எல்லாவற்றையும் தனக்கு விசேஷணமாகக் கொண்டுள்ளான் என்றுரைப்பதுமுண்டு.
English Translation
Praise him or blame him, -O Heart of mine!, -honour him or dishonour him, the Lord accepts all; for does he not contain the mighty ocean, the mountains, plains, winds, bodies and lives, all within himself? He wears a cool Tulasi garland.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்