- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
பலவகைக் கொடிய பாவங்கள் என்னிடத்தில் நெருங்கிக் கிடப்பதைக் கண்டு ‘இப்பாவங்கள் இன்னமும் முன்போலவே மேல்விழுந்து நலிந்தால் நாம் என்ன செய்வது!’ என்று பயப்பட்டேன்; ‘எம்பெருமானது திருவடிகளிற் சென்று சேர்ந்துவிட்டால் பாவங்கள் அடியோடு நீங்கப்பெற்று நாம் உஜ்ஜீவிக்கப் பெறலாம்’ என்று துணிந்து, உன் திருவடிகளில் வந்து சேரும்விதம் யாது? என்று ஆராய்ந்து பார்த்தேன்; நமது வாய்மொழிகளை உன்விஷயத்தில் உபயோகிப்பதே அதற்குச் சிறந்தவழி என்று நிச்சயித்து, திருமந்திரத்தின் பொருளை விவரிப்பதான இப்பிரபந்தத்தைப் பாடினேன்; இதனால், பாவங்களுக்கு அஞ்சின அச்சம்தீர்ந்து உஜ்ஜீவநமும் பெற்றேன் என்றாராயிற்று. சேர்வான்= வான்விகுதி பெற்ற எதிர்கால வினையெச்சம். “நயம்நின்ற” என்பதற்கு- ‘திருமந்த்ரார்த்தத்தை நயப்பித்தலில் நோக்கமாயுள்ள’ என்று பொருள் கூறுதலும் பிரகரணத்திற்குப் பொருந்தும், எம்பெருமானுடைய ஸ்வரூபம், அவனை அடைதற்குரிய ஜீவாத்மாவின் ஸ்வரூபம், அடைவதற்கான உபாயம், அடைந்து பெற வேண்டியபேறு, அடைவதற்கு இடையூறாகவுள்ள விரோதிஸ்வரூபம் ஆகிய இவ்வைந்து விஷயங்களே திருமந்திரத்தின் அர்த்தமாதலாலும், இவையே இப்பிரபந்தத்திலும் விவரிக்கப்படுகின்றனவாதலாலும் இதுகூடும்.
English Translation
Your lotus feet, O Lord!,-is all that I seek to attain, Fearing the record of my past karmas, I sought a way to escape, with my song garland, I learned to recite the Mantra, "Namo Narayana', and offer worship.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்