- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
யமபடர்கள் பாகவதர்திறத்திலே அஞ்சியிருக்கும்படியை அருளிச்செய்கிறார். யமன் நாட்டிலுள்ளாருடைய பாவங்களையெல்லாம் ஆராய்வதற்கு அந்த ஸர்வேச்வரனால் நியகிக்கப்பட்டவனே; ஆனாலும் தனக்கும் நியாமகனான அந்த ஸர்வேச்வரனுடைய பக்தர்கள் நற்காரியங்களைத் தவிர்ந்து தீயகாரியங்களையே செய்துவந்த போதிலும் அவர்களை யமகிங்கரர்கள் “நமது யஜமாநனான யமனையும் நியமிக்கும் வல்லமை யுடையவர்களன்றோ இந்த பாகவதர்கள்” என்று கொண்டாடி வணங்கி அப்பால் போய்விடுவார்களே தவிர, அவர்களுடைய குணா குணங்களை ஒருபோதும் ஆராய்ச்சி செய்யமாட்டார்கள்: ஏனெனில்; அப்படிப்பட்டவர்களை ஸம்ரக்ஷிப்பதில் புருஷகாரபூதையான பிராட்டியும் ஒருகால் ஏதேனும் குறை சொல்லிலும் அதையும் லக்ஷியஞ்செய்யாமல் 1. “ என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்” என்று சொல்லிக்கொண்டு ஸர்வேச்வரன் பரிந்து ரக்ஷிப்பவனன்றோ? இப்படிப் பெரிய பிராட்டியாராலும் குறைகூரக்கூடாதவர்கள் விஷயத்தில் நம்மால் அணுகவும் முடியுமோ? என்கிற பயத்தினாலென்க. அன்றியும், யமன் தன்படர்களை நோக்கி ‘நீங்கள் வைஷணவர்கள் திறத்தில் அபசாரப்படவேண்டா; அவர்களைக்கண்டால் அநுவர்த்தித்திருங்கள்’ என்று கட்டளை யிட்டிருக்கின்றானென்பதை, “ திறம்பேன்மின் கண்டீர், திருவடி தன் நாமம், மறந்தும் புறந்தொழா மாந்தர்- இறைஞ்சியும் சாதுவராய்ப் போதுமின்களென்றான் நமனும் தன் , தூதுவரைக் கூவிச் செவிக்கு.” என்ற நான்முகந்துருவந்தாதிப் பாசுரத்தாலும், * ச்வபுருஷ மபிவீக்ஷ்ய பாசஹஸ்தம்வததி யம : கில தஸ்ய கர்ணமூலே – பரிஹர மதுஸூதநப்ரபந்நாந் ப்ரபுரஹமந்யந்ருணாம் . ந வைஷ்ணவாநாம்.” என்ற ஸ்ரீவிஷ்ணுபுராணவசநத்தாலும் அறிக. “கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்ன, நாளுங் கொடுவினைசெயுங் கூற்றின் தமர்களுங் குறுககில்லார்” என்ற திருவாய்மொழியும், “வென்றி கொண்ட வீரனார், வேறு செய்து தம்முளென்னை வைத்திடாமையால் நமன், கூறுசெதுகொண்டு இறந்த குற்ற மெண்ணவல்லனே” என்ற திருச்சந்தவிருத்தமும் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.
English Translation
His devotees, whatever be their karmic record, are our master's servants," –so saying, the agents of yama disperse, know it. Those who lbecome devotees of the great serpent-reclining cowherd Lord, established such a name.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்