விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அரவம் அடல்வேழம்*  ஆன்குருந்தம் புள்வாய்* 
    குரவை குடம்முலை மல்குன்றம்,* - கரவுஇன்றி-
    விட்டுஇறுத்து மேய்த்துசித்து*  கீண்டு கோத்துஆடி,*  உண்டு- 
    அட்டுஎடுத்த செங்கண் அவன்  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அரவம் - காளிய நாகத்தை
விட்டு - விட்டடித்தும்
அடல் வேழம் - பொருவதாக வந்த (குவலயாபீட மென்னும்) யானையை
இறுத்து - (தந்தத்தை) முறித்து உயிர் தொலைத்தும்
ஆன் - பசுக்களை

விளக்க உரை

கண்ணபிரானது காளியமர்த்தநம் முதலிய அரிய செயல்களை அனுஸந்தித்த ஆழ்வார் அவற்றில் உள்குழைந்து ஈடுபட்டு மேலொன்றும் சொல்லமாட்டாமையால் ஒரு வினைமுற்றுச் சொல்லவும்மாட்டாது விட்டனர்; ஆச்சர்யகரமான விஷயங்களைக் கூறும்போது அவற்றுக்கு வினைமுற்றுத்தந்து முடியாது நிறுத்துவதைப் பல கவிகளின் வாக்குகளிலும் காணலாம். ஈற்றடியில் எடுத்த என்றது –’ அன்’ சாரியை பெறாத பலவின்பாற்பெயர்; சாரியை பெறின் ‘எடுத்தன’ எனநிற்கும். இப்பாட்டில், அரவுமுதலிய பெயர்ச்சொற்கள் ‘விட்டு’ முதலிய வினைச்சொற்களை முறையே சென்று இயைதலால் முறை நிரனிறையாம்; இதை வடமொழியில் ‘யதாஸங்க்யாலங்காரம்’ என்றும், தென்மொழியில்’ நிரனிறையணி’ என்றும் அலங்கார சாஸ்திரிகள் கூறுவர். காளியநாகத்தை வலியடக்கி உயிரோடு விட்டதும், குவலயா பீடமென்னும் கம்ஸனது யானையைக் கொம்புமுறித்து முடித்ததும் , தன்மேன்மையைப் பாராமல் தாழநின்று பசுக்களைமேய்த்ததும், அஸுரன் ஆவேசித்திருந்ததொரு குருந்தமரத்தை முறித்து வீழ்த்தியதும், பகாஸுரன் வாயைக் கீண்டொழித்ததும், இடைப்பெண்களோடே குரவைக் கூத்தாடியதும், குடங்களெடுத்தேற வெறிந்தாடியதும், தன்னைக் கொல்லுமாறு தாய்வடிவு கொண்டு வந்த பூதனையின் ஸ்தனங்களை உறிஞ்சியுண்டதும், மல்லர்களைக் கொன்றதும், கோவர்த்தனமலையைக் குடையாகவெடுத்தேந்தி நின்றதுமாகிய இச்செயல்கள் என்ன ஆச்சரியம்! என்று ஈடுபட்டுப் பேசினாராயிற்று.

English Translation

The Lord reveals himself in his various acts; he let go the snake kaliya, killed the elephant kuvalayapida, graced the cows, broke the kurundu trees, ripped the bird's beaks, danced the kuravai with Gopis, played with pots as an acrobaf, drank the poison breast, wrestled with killers, and lifted the mount, Out senkammal Lord is he!"

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்