விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சென்றால் குடைஆம்*  இருந்தால் சிங்காசனம்ஆம்,* 
    நின்றால் மரவடிஆம் நீள்கடலுள்,* - என்றும்-
    புணைஆம் மணிவிளக்குஆம்*  பூம்பட்டுஆம் புல்கும்- 
    அணைஆம்,*  திருமாற்கு அரவு.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புணை ஆம் - திருப்பள்ளி மெத்தையாவன்;
அணி விளக்கு ஆம் - மங்கள தீபமாவன்;
பும்பட்டு ஆம் - அழகிய திருப்பரி வட்டமாவன்;
புல்கும் அணை ஆம் - தழுவிக்கொள்வதற்கு உரிய அணையுமாவன்.
சிங்காசனம் ஆம் - ஸிம்ஹாஸாமாயிருப்பன்;

விளக்க உரை

திருவனந்தாழ்வானைப்போல எம்பெருமானுக்கு எல்லாக்காலங்களிலும் எல்லா விதமான அடிமைகளையும் செய்யப்பெற வேணுமென்று திருவுள்ளங்கொண்ட ஆழ்வார் அத்திருவனந்தாழ்வான் செய்யுமடிமைகளை யெடுத்தருளிச் செய்கிறார். எம்பெருமான் உலாவியருளும் போது மழை வெயில் படாதபடி குடையாகவடிவெடுப்பன்; எழுந்தருளீயிருந்தகாலத்தில் திவ்யஸிம்ஹாஸநஸ்வரூபியாயிருப்பன்; நின்று கொண்டிருந்தால் பாதுகையாயிருப்பன்; திருப்பாற்கடலில் திருக்கண்வளர்ந் தருளும்போது திருப்பள்ளி மெத்தையாயிருப்பன்; ஏதேனு மொன்றை விளக்குக்கொண்டுகாண அவன் விரும்பினபோது திருவிளக்குமாவன்; சாத்திக்கொள்ளும்படி திருப்பரிவட்டத்தை அவன் விரும்பினபோது அதுவுமாவன்; சாயந்தருளும்போது தழுவிகொள்வதற்குரிய உபதாநமுமாவன். நீள்கடலுள் புணையாம் – திருப்பாற்கடலில் அழுந்தாதபடி தெப்பமாவன் என்று முரைக்கலாம் . புல்கும் அணையாம் –எம்பெருமான் பிரணயகலஹத்தினால் பிராட்டிமாரைப் பிரியநேர்ந்தால் அப்போது விரஹதுக்கம் தோன்றாதபடிக்குத் திருவனந்தாழ்வானைத் தழுவிக்கொள்வனாம்.

English Translation

Tirumal has a snake, when he walks, it hoods him like a parasol; when he sits, it folds itself into a settle; when he stands, it is at his feet like his sandals; in the deep ocean where he reclines, it becomes a float., its eyes become lamps, if wraps around like gossamer silk and becomes an arm-rest for the Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்