விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முரணை வலிதொலைதற்கு ஆம்என்றே,*  முன்னம்- 
  தரணி*  தனதுஆகத் தானே* - இரணியனைப்-
  புண்நிரந்த வள்உகிர்ஆர்*  பொன்ஆழிக் கையால்*  நீ- 
  மண்இரந்து கொண்ட வகை?  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தரணி தனது ஆக தானே - பூமியெல்லாம் தன்னுடையதென்று அஹங்காரங்கொண்டிருந்த
இரணியனை - ஹிரண்யாஸுரனை
புண் நிரந்த - புண்படுத்திப் பிளந்த
வள் உகிர் ஆர் - கூர்மையான நகங்கள் பொருந்திய
பொன் ஆழி கையால் - அழகிய திருவாழியைக்கொண்ட திருக்கையினால்

விளக்க உரை

ஆச்ரிதவிரோதியான இரணியனைக் கிழித்தெறிந்ததுபோல மஹாபலியையும் கொன்றொழிக்கலாமாயிருக்கச் செய்தேயும் அங்ஙனஞ் செய்யாது . அழகிய வடிவெடுத்து யாசகனாய் நிற்கும் வகையாலே உலகங்கொண்டது ஏதுக்காக? “எம்பெருமான் இவ்வளவு ஸெளலப்யகுணமுடையவன்” என்று எல்லாரும் தெரிந்துகொண்டு இக்குணத்தில் ஈடுபட்டும் தங்களுடைய அஹங்காரத்தை விட்டொழிந்து ஆட்படக்கூடுமென்கிற திருவுள்ளத்தாலோ? என்கிறார். “இரணியனைப் புண்ணிரந்த வள்ளுகிரார் பொன்னாழிக்கையால்” என்ற சொல்லாற்றலால், மாவலியையும் இரணியனைப் போலவே பங்கப்படுத்தவேண்டியது ப்ராப்தமாயிருக்கவும் அங்ஙனஞ் செய்யாதது மேற்குறித்த கருத்தினாலாம் – என்பது விளங்கும்.

English Translation

Was it not to destroy the foe's rising power, -O Discus, wielder Lord who fore into the mighty Hiranya's chest, -that you came and took the Earth as a gift, when it was already yours?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்