விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எழுவார் விடைகொள்வார்*  ஈன்துழாயானை,* 
  வழுவா வகைநினைந்து வைகல் தொழுவார்,*
  வினைச்சுடரை நந்துவிக்கும்*  வேங்கடமே,*  வானோர்- 
  மனச்சுடரைத் தூண்டும் மலை.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நந்துவிக்கும் - அணைக்கின்ற
வேங்கடமே - திருவேங்கடமலையே
வானோர் - நித்ய ஸூரிகளுடைய
மனம் சுடரை - ஹ்ருதயமாகிற விளக்கை
தூண்டும் - தூண்டி ஜ்வலிப்பிக்கின்ற

விளக்க உரை

எழுவார் என்றால் எழுந்துபோகிறவர்களையும் சொல்லும்; மேன்மேலும் ஆசைப்பெருக்கமுடையவர்களையும் சொல்லும். இரண்டு படியாலும், ஐச்வர்யார்த்திகளைச் சொல்லுகிறது இங்கு, ‘எங்களுக்கு ஐச்வர்யத்தைத் தரவேணும்’ என்று பிரார்த்தித்து அது கைப்பட்டதும் எம்பெருமானைவிட்டு எழுந்துபோகிறவர்கள் என்றாவது, ஐச்வரியம் வேணுமென்று மேலே மேலே பிரார்த்திக்குமவர்கள் என்றாவது கொள்க. இவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது- ஐச்வர்ய ப்ராப்திக்கு விரோதியான பாவங்களைத் தொலைத்து ஐச்வர்ய விருப்பத்தை நிறைவேற்றுகை. விடை கொள்வார் என்றால் விட்டு நீங்குகிறவர்கள் என்கை; ஸந்தர்ப்பம் நோக்கி இங்கே கைவல்யார்த்திகளைச் சொல்லுகிறது. அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது – ஆத்மாநுபவத்திற்கு விரோதியான பாவங்களைத் தொலைத்து கைவல்யா நுபவத்தை நிறைவேற்றுகை. ஈன்துழாயானை வழுவரவகை நினைந்து வைகல் தொழுகிறவர்கள் - பரமைகாந்திகளான பகவத்பக்தர்கள்; அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது – மாறி மாறிப் பலபிறப்பும் பிறக்கும்படியான தீவினைகளைத் தொலைத்து முத்தியளிக்கை. ஆக, வேண்டுவோர் வேண்டின படியே அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்டப்ராப்தியையும் செய்விக்கவல்லது திருவேங்கடம் என்றதாயிற்று. [வினைச்சுடரை நந்துவிக்கும்]- பாவங்களை நெருப்பாக ரூபித்துக் கூறினமைக்கு இணங்க “நந்துவிக்கும்” எனப்பட்டது; நந்துவித்தல்- (நெருப்பை)அணைத்தல். [வானோர்மனச் சுடரைத் தூண்டும்மலை.] – ஒரு நெருப்பை அணைக்கும்; ஒரு நெருப்பை அபிவிருத்தி செய்யும் என்று சமத்காரமாக அருளிசெய்கிறார். வானோர் மனச்சுரடைத் தூண்டுகையாவது- பரமபதத்திலே பரத்வகுணத்தை அநுபவித்துக்கொண்டிருக்கிற நித்யஸூரிகளை , இங்குவந்து ஸெளலப்ய ஸெளசீல்யாதி குணங்களை அநுபவிக்குமாறு உத்ஸாஹமூட்டுதலாம். திருவேங்கடமலையின் தன்மை இப்படிப்பட்டதென்று அநுஸந்தித்தாராயிற்று

English Translation

Offering worship in Tiruvenkatam, those who constantly think of the Tulasi-garland Lord will be rid of their load of karmas. Even the celestials' hearts are roused by the hill.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்