- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
‘என்னுள்ளம் உரைமேற்கொண்டு ஏத்தியெழும்” என்றதனால் –நெஞ்சு தந்தொழிலாகிய சிந்தனையோடு நில்லாமல் வாக்கின் தொழிலையும் ஏற்றுகொண்டமை கூறப்பட்டது. திருவாய்மொழியில் “முடியானே மூவுலகுந் தொழுதேத்தும்” என்ற பாசுரத்தை இங்கே நினைப்பது . “உரைமேற்கொண்டு” என்பதை ‘மேல் உரைகொண்டு” என்று மாற்றி மேலான சொற்களைக் கொண்டு என்று முரைக்கலாம். [வரைமேல் மரகதமேபோலத் திரைமேற்கிடந்தானை.] திருப்பாற்கடலிலே எம்பெருமான் பள்ளிகொண்டிருப்பது- வெண்ணிறமானதொரு மயிலில் மரகதக்கல்லைப் பதித்தாற் போன்றிருப்பதாக அபூதோபமை கூறப்பட்ட்தென்க. [கீண்டானை.] ‘இரணியன் பார்வை’ என்பது மூலத்திலில்லையாயிலும் கீண்டா னென்னும்போதே ‘இரணியன் மார்வு’ ஞாபகத்திற்கு வந்துவிடும். இரணியனுடலைக் கீண்டது போலவே, குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியென்னுமஸுரனது வாயைக் கீண்டதும் பகாஸுரனுடைய வாயைக் கீண்டது முண்டாதலால் அவையும் நினைவுக்குவரின் அவற்றையும் கொள்ளத் தட்டில்லை. அன்றியே, “ கேழலாய்க் கீண்டானை இடந்தானை” என்று சேர்த்து வராஹரூபியாய் அண்டபித்தியிலே ஒட்டின பூமியை அதனின்று ஒட்டு விடுவித்துப் பிறகு கோட்டாற் குத்தியெடுத்தவனை என்று பொருள் கூறுவதும் பொருந்தும். “திரைமேற்கிடந்தானைக் கீண்டானை” என்ற சேர்த்தியால்- எம்பெருமான் ‘நம் அடியார்க்கு எப்போது என்ன தீங்கு வருமோ’என்ற சிந்தனையுடனே சயனித்திருப்ப, துன்புற்ற அடியாரின் கூக்குரல் செவிப்பட்டவுடனே பதறி அத்துன்பத்தைத் தீர்க்க ஏற்றதொரு திருக்கோலங்கொண்டு இங்குத்தோன்றி ரக்ஷித்தருள்கிறானென்பது விளங்கும். இப்படிப்பட்ட எம்பெருமானை எனது நெஞ்சு இடைவிடாது துதித்து உஜ்ஜீவிக்கின்றது என்றாராயிற்று.
English Translation
With spoken words my heart sees the dark emerald gem of a mountain reclining in the ocean. He came as a boar and lifted the Earth, he parted the ocean. Forever I shall praise and offer worship.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்