விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நான்ற முலைத்தலை நஞ்சுஉண்டு,*  உறிவெண்ணெய்- 
  தோன்ற உண்டான்*  வென்றி சூழ்களிற்றை ஊன்றி,*
  பொருதுஉடைவு கண்டானும்*  புள்வாய் கீண்டானும்,* 
  மருதுஇடைபோய் மண்அளந்த மால்   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நான்ற முலைத் தலை - சரிந்து தொங்குகின்ற முலையிலுள்ள
நஞ்சு - விஷத்தை
உண்டி - (அவள் பிணமாய் விழும்படி) அமுது செய்து
உறி - உறிகளிலே வைத்த
வெண்ணெய் - வெண்ணெயை(க் களவு செய்து)

விளக்க உரை

இப்பாசுரமும் கீழ்ப்பாசுரம் போலே இழந்தநாளைச் சொல்லி அநுதாபப்படுவதாம். ஸ்ரீ கிருஷ்ணனாய்த் திருவவதரித்துப் பேய்ச்சியை முலையுண்கிற வியாஜத்தாலே முடித்தும், நவநீதம் முதலியவற்றைக் களவாடி அமுது செய்தும் குவலயாபீடமென்கிற கம்ஸனது மதயானையை முடித்தும் பகாஸுரனை வாய்பிளந்தும் இரட்டை மருதமரங்களை முறித்துத் தள்ளியும் இப்படி பலவகையான சிறுச்சேவகங்களைச் செய்தருளின காலத்திலும் ஸேவிக்கப்பெறாதே இழந்தேனே! என்கிறார்போலும். இழந்ததற்கு அநுதாபப்படுவதாகப் பாசுரத்தில் வாய்ச்சொல் இல்லையாயினும் கீழ்ப்பாசுரங்களின் ஸந்தர்ப்பத்தை நோக்குங்கால் இழந்த நாளைக்கு அநுதாபம் தோன்றவே இப்பாசுர மருளிச்செய்வதாகக் கொள்ளலாம். “ இடக்கை வலக்கை அறியாதாரும் வாழும்படி இடைக்குலத்திலே வந்து பிறந்தவிடத்திலும் இழந்தேனிறே என்று சோகிக்கிறார்.” என்றார் முன்னோர்களும். இனி, கிருஷ்ணாவதார சரித்திரங்கள் சிலவற்றைச்சொல்லி ஆநந்தமாகப் போதுபோக்குகிறார் எனினும் குற்றமில்லை. “மருதிடைபோய் மண்ணளந்த” =உலகளப்பதற்கு முன்னே மருதிடைபோனான் என்று பொருளன்று; மருதிடைபோனது ஒருகாலத்திலும் மண்ணளந்தது ஒருகாலத்திலுமாகிலும் ஆழ்வாருடைய ஜ்ஞாநவைசத்யத்தாலே அநுஸந்தாந தோரணியில் முன்னது பின்னதென்கிற வாசியின்றியே எல்லாம் ஒன்று சேர விளங்குகிறபடி .

English Translation

The Lord who measured the Earth, also sucked the poison from full breasts, ate butter from the hanging rope-self, battled with a rutted elephant and took its fusk, entered between two closely growing Marudu trees, fore apart the beaks of a bad bird, and has the hue of the dark ocean.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்