- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஜீவாத்மாவுக்குப் புதிதாக ஸ்ருஷ்டியென்பது இல்லை யாகையால் “மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து” என்கிறபடியே அநாதிகாலமாகவே பல பல பிறவிகள் பெற்று ஸம்ஸாரியாய் வந்துகொண்டிருக்கிறேன்; எம்பெருமான் உலகளந்தருளின காலத்திலும் நான் ஏதோ ஒரு ஜந்துவாகப் பிறந்திருந்தவனேயொழிய அன்று நான் இல்லாமலிருக்கவில்லை; அப்போது நான் விவேகியாயிருந்து அந்த திவ்யசரிதையிலே ஈடுபட்டிருந்தேனாகில் அப்போதே இந்த ஸம்ஸாரத்தில் நின்றும் விடுபட்டு முக்தனாய்ப் போயிருப்பேன்; அன்று நான் அறிவிலியாய்க்கிடந்து வாணாளை வீணாளாகப் போக்கிவிட்டேன்; ஆகவே பழுதே பலபகலும் போயினவென்று கதறியழவேண்டியதாயிற்று- என்பதே இப்பாட்டின் உட்கருத்தாகும். “முடியும் விசும்பளந்தது என்பர்” என்ற சப்தஸ்வாரஸ்யம் நோக்கத்தக்கது. என்பர் என்கையாலே- உலகளந்தவாற்றை நான் இன்று பிறர்சொல்லக் கேட்கவேண்டியதாயிற்றேயொழிய நேரிலிருந்து ஸேவிக்கப் பெறவில்லையே யென்கிற அநுதாபம் நன்கு விளங்குமிறே. கீழ் இரண்டாம்பாட்டில் “என்று கடல் கடைந்த்து “ என்று கடல் கடைந்த்து எவ்வுலகம் நீரேற்றது” என்று புராதன சரிதங்களெல்லாம் ப்ரத்யஷம்போலப் பேசப்பட்டிருந்தாலும், கிரம்மாக அவை கடந்தகாலத்திலே அவற்றைத் ஹ்டாம் ஸேவிக்கப்பெறவில்லையே என்கிற வருத்தம் ஸம்பாவிதமேயன்றே. கீழ் இரண்டாம்பாட்டில் “ என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீரேற்றது “ என்று புராதன சரிதங்களெல்லாம் ப்ரத்யக்ஷம்போலப் பேசப்பட்டிருந்தாலும், கிரமமாக அவை நடந்தகாலத்திலே அவற்றைத் தாம் ஸேவிக்கப்பெறவில்லையே என்கிற வருத்தம் ஸம்பாவிதமேயன்றோ.
English Translation
The Lord rides the Garuda bird. He fore into Hiranya's chest with his sharp nails, They say when he measured the Earth, his feet straddled the land, while his arms stretched out and measured the Quarters. Even his crown measured the space above.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்