விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மயங்க வலம்புரி வாய்வைத்து,*  வானத்து- 
    இயங்கும்*  எறிகதிரோன் தன்னை,*  -முயங்குஅமருள்-
    தேர்ஆழியால் மறைத்த*  என்நீ திருமாலே,*
    போர்ஆழிக் கையால் பொருது?   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மயங்க - எதிரிகள் அஞ்சி அறிவு கலங்கும்படியாக்
வலம்புரி - ஸ்ரீபாஞ்சஜந்ய மென்னும் திருச்சங்கை
வாய் வைத்து - தனது திருப்பவளத்திலே வைத்து ஊதி
போர் ஆழிகையால் - போர்செய்வதற்கு உபகரணமான திருவாழியை ஏந்தின கையாலே
பொருது - (பீஷ்மர் முதலானவர்களைத் துரத்தி) யுத்தம் செய்து

விளக்க உரை

மயங்கவலம்புரி வாய்வைத்ததும் எறிகதிரோன்தன்னை ஆழியால் மறைத்ததும் போராழிக்கையால் பொருந்தும் ஏதுக்காக? என்றுஆழ்வார் எம்பெருமானைக்கேள்வி கேட்கிறார் இப்பாட்டால். ‘போரில் நான் ஆயுதமெடுப்பதில்லை என்று பிரதிஜ்ஞைசெய்து வைத்து அதற்குமாறாகக் காரியஞ்செய்துவைத்து அதற்கு மாறாக்க் காரியஞ் செய்தது எல்லாரோடும் ஒரு நிகராகவுள்ள உனது உறவுக்குத் தகுமோ? ஸத்யஸங்கல்பனான உன் இருப்புக்குத் தகுமோ? உன் பெருமைக்குத் தகுமோ? இவை யொன்றையும் பாராமல் நீ செய்த செயல்கள் எதற்காக? என்ற இக்கேள்வியானது- ஆச்சரிதர்களான பாண்டவர்களிடத்திலே நீ கொண்டிருந்த பக்ஷபாதமே யன்றோ இத்தனையும் செய்வித்தது என்று வெளியிடுகிற முகத்தால் அவனுடைய ஸெளஹார்த்யகுணத்தை வெளியிடுவதில் நோக்குடைத்தென்க. முயங்கு அமர் என்றது பலபேர்கள் திரண்டு நெருங்கியிருக்கும் போர்களமென்றபடி. போர்புரிய வந்தவர்களும் போர்காண வந்தவர்களுமாகத் திரண்ட திரளுக்கு எல்லையில்லையிறே தேராழியால் மறைத்தது’ என்கிறாரே, தேர்ச்சக்கரத்தை யெடுத்தோ ஸூர்யனை மறைத்தது? என்று சிலர் சங்கிப்பர்; அன்று; தன் திவ்யாயுதமான சக்கரத்தைக்கொண்டே மறைத்தது; சக்கரம் தேருக்கு உறுப்பாயிருக்குந் தன்மையுடையதாதலால் வடநூலார் ’ரதாங்கம்’ என வழங்குதல் போலத் தேராழியெனப்பட்டதென்க. ’போராழிக்கையால்’ -கையிற்கொண்ட போராழியினால் என்று கொள்ளலாம்.

English Translation

In the battle of the yore, -O Lord Tirumali-you below the wonderful conch and wielded the sharp discus, But why did you hide the bright sun in the sky with a chariot wheel?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்