விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திசையும் திசைஉறு தெய்வமும்,*  தெய்வத்- 
    திசையும்*  கருமங்கள் எல்லாம்* - அசைவில்சீர்க்-
    கண்ணன் நெடுமால்*  கடல்கடைந்த,*  கார்ஓத- 
    வண்ணன் படைத்த மயக்கு. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திசைஉறு தெய்வமும் - அந்தந்த திசைகளிலே வாழும் தேவதைகளும்
தெய்வத்து இசையும் கருமங்கள் - அந்தந்த தேவதைகளுக்கு ஏற்ற (ஸ்ருஷ்டி முதலிய) வியாபாரங்களும்
எல்லாம் - ஆகிய இவையெல்லாம்,
அசைவு இல்சீர் - கேடில்லாத [நித்யமான] குணங்களையுடைய
கண்ணன் - ஸ்ரீகிருஷ்ணனாயவதரித்த

விளக்க உரை

தெய்வத்து இசையும் கருமங்கள்- நான்முகன் படைப்புத்தொழிலை நிர்வஹிக்கக்கடவன்;சிவபிரான் ஸம்ஹாரத் தொழிலை நிர்வஹிக்கக்கடவன்; இந்திரன் தேவதைகளை மெய்க்காட்டுக்கொள்ளுந் தொழிலை நோக்கக்கடவன்; யமன் உயிர் நீத்துந் தொழிலை நடத்தக் கடவன் என்றிப்படி அவ்வத் தெய்வங்கட்கு இசைந்தவாறாகத் தொழில்களை வகுத்திருப்பதும் காரோதவண்ணன் படைத்த மயக்கு. திரிபுர மூன்றெரித்தல், காமதஹநம், வ்ருத்ராஸுரவதம் முதலிய அரிய பெரிய செயல்களை இங்குக் கொள்ளவுமாம். கடல் கடைந்து அமுதங் கொண்ட காலத்திலே தேவாஸுரச்ம்வாதம் ப்ரஸங்கிக்க, எம்பெருமான் மோஹிநி யுருவம் பூண்டு உகவாதாரை மயக்கினது போலவே இவையும் மயக்காக உண்டுபண்ணி வைக்கப்பட்டவை என்கிற உட்பொருளுந் தோன்றக் “ கடல் கடைந்த காரோதவண்ணன் படைத்த மயக்கு” என்றருளிச் செய்தாரென்க. கடைந்த கடலிலே அமுதம் விஷம் யானை குதிரை சந்திரன் கல்பவ்ருக்ஷம் அப்ஸரஸ் முதலிய பல விசித்திரப் பொருள்களை படைத்தருளின பெருமான் இவை யித்தனையும் செய்யவல்லவனே யென்பதும் மூதலிக்கப்பட்டதாம். மயக்கு என்றது- மயங்கச் செய்யும் பொருள் என்றபடி; ‘விளக்கு’ என்றால் விளங்கச் செய்யும் பொருள் என்று பொருள் யிடுதல்போல.

English Translation

The Quarters, the respective gods, in each Quarters, they ways to propitiate the respective gods, -all these are the wonders created by krishna, the changeless eternal wonder-Lord, the dark ocean-hued Lord who churned the ocean in the yore.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்