விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஒன்றும் மறந்தறியேன்*  ஓதநீர் வண்ணனைநான்,* 
  இன்று மறப்பனோ ஏழைகாள்* - அன்று-
  கருஅரங்கத்துள் கிடந்து*  கைதொழுதேன் கண்டேன்*
  திருவரங்கம் மேயான் திசை.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

திசை - ஸ்வபாவங்களையெல்லாம்
கண்டேன் - ஸாக்ஷாத்கரித்தவனாய்
கைதொழுதேன் - அஞ்ஜலியும் செய்தவனாகிய நான்
ஓதம் நீர் வண்ணனை - வெள்ளம் பரந்த ஸமுத்ரஜலம்போலே குளிர்ந்த வடிவழகுள்ள அப்பெருமானை.
ஒன்றும் மறந்து அறியேன் - க்ஷணகாலமும் மறந்தறிய மாட்டேன்:

விளக்க உரை

ஓதநீர்வண்ணனை என்ற சொல்லாற்றலால்- அவனுடைய வடிவழகு நெஞ்சிலே ஊன்றப் பெற்றவர்கட்கு அவனை மறப்பது ஒருநாளும் ஸம்பாவிதமல்ல என்பது பெறப்படும். கர்ப்பவாஸ காலத்தில் வந்து ஸேவை ஸாதித்தது மாத்திரமே யல்லாமல் எப்போதும் கடாக்ஷித்து விஷயீகரிப்பதற்காகவே திருவரங்கம் முதலான திருப்பதிகளிலே ஸந்நிதனாயிரா நின்றா னென்பது தோன்றத் திருவரங்கமேயான் என்கிறார். மேயான் - மேவியிருப்பவன் திருவுள்ளமுவந்து எழுந்தருளி யிருப்பவன். இப்பாட்டின் முடிவிலுள்ள திசை என்னும் பதத்திற்கு ‘திக்கு’ என்னும் பொருளாயினும் ‘தன்மை’ என்னும் பொருளில் அஃது இங்குப் பிரயோகிக்கப்பட்டது. இப்பிரயோகம் வட நூல்களிலே விசேஷமாகவுண்டு. இதில் மூன்றாம் மடியில் ஒரு சங்கை பிறக்கும்; அதாவது –பொய்கையிலே ஒரு செங்கமலப் பூவிலே திருவவதரித்ததனால் அயோநிஜராகிய இவ்வாழ்வார்க்கு கர்ப்பவாஸ மென்பது கிடையாதே; அப்படி யிருக்க கருவரங்கத்துள் கிடந்து” என்று இவர்தாம் எங்ஙனே அருளிச் செய்கிறார் என்று; இதற்கு உத்தரமாவது- “கருவரங்கத்துள் கிடந்து” என்ற விதனால், *தீண்டாவழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறி தசையுமாய் வேண்டா நாற்றம்மிக்கிருக்கிற கர்ப்பத்தும்பையில் நின்றும் ஆழ்வார் பிறந்தாரென்று கொள்ளவேண்டிய அவசியம் யாதுமில்லை; எவ்விடத்தில் நின்று அவதரித்தாரோ அவ்விடமே கர்ப்பஸ்தாநமாகும்; இந்தவாழ்வாருடைய வாழித்திருநாமத்தில் “வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே” என்றிருப்பதும் இவ்வர்த்தத்தை வற்புறுத்தும் ‘நான் இவ்விருள் தருமா ஞாலத்தில் வந்து தோன்றுவதற்கு முன்னமே எம்பெருமானுடைய கடாக்ஷம் பெற்றவன்’ என்று சொல்லுவதே இங்கு விலக்ஷிதம் “அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்” என்றாற்போலுமாம். “கருவரங்கத்துள்” என்ற விடத்து அரங்கம் என்னும்சொல் ரங்கம் என்ற வடசொல்லின் விகாரம்; அச்சொல் –நர்தனம் செய்யுமிடம், போர் செய்யுமிடம் என்று சிறப்பிடப் பொருளதாயினும் இங்கே ‘இடம்’ என்னும் பொதுப் பொருளிலே நிற்கிறது

English Translation

All ye people! I can never forget the ocean-hued Lord! Then when I lay in the womb I folded my hands in worship. Now I note the southern Quarter which the lord of Arangam is facing, -Yama's Quarters.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்